Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
கிழக்கு மாகாணத்தில் வீதி விபத்துகளை  குறைக்கும் நோக்குடன் விழிப்புணர்வு செயலமர்வு!

கிழக்கு மாகாணத்தில் வீதி விபத்துகளை குறைக்கும் நோக்குடன் விழிப்புணர்வு செயலமர்வு!

9 months ago
in செய்திகள், மட்டு செய்திகள்

கிழக்கு மாகாணத்தில் வீதி விபத்துகளை குறைத்தல் தொடர்பான விழிப்புணர்வுச் செயலமர்வு மட்டக்களப்பில் நடைபெற்றது.

சுகாதார அமைச்சினது காயம் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு அலகின் கிழக்கு மாகாணத்திற்கான மீளாய்வுக் கூட்டம் மட்டக்களப்பில் இடம்பெற்றது.

கிழக்குமாகாண வைத்தியசாலைகள் மற்றும் மட்டக்களப்பு, திருகோணமலை, கல்முனை, அம்பாறை பிராந்தியங்களின் சுகாதார பணிப்பாளர் பணிமனை அதிகாரிகள் கலந்து பங்குபற்றிய இவ் மீளாய்வுக்கூட்டமானது புதன்கிழமையன்று மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

வரவேற்புரை நிகழ்த்திய மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி இரா. முரளீஸ்வரன் வீதி விபத்துக்கள் மற்றும் காயங்கள் பற்றிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் பொதுமக்களுக்கான விழிப்புணர்வுகளை விரிவுபடுத்தல் போன்ற செயற்பாடுகளை தொடர்ந்து முன்னெடுப்பதன் மூலம் வீதி விபத்துக்களை குறைப்பதுடன், சுகாதார சேவைகளுக்கான நிதி மற்றும் வேலைப்பழுவினை கட்டுப்படுத்த முடியும் என்றார்.

இதை தொற்றா நோய்களுக்கான மட்டக்களப்பு பிராந்திய வைத்திய அதிகாரி டாக்டர் இ.உதயகுமார் ஒருங்கிணைத்து நடத்தினார். காயத்தடுப்பு நிகழ்ச்சித்திட்டம் பற்றிய தேசிய நிகழ்ச்சித்திட்ட முகாமையாளர் வைத்தியக் கலாநிதி சமிதா சிறிதுங்க கிழக்கு மாகாண வைத்தியசாலைகள் காயம் தடுப்பு சிகிச்சைகளில் பங்களிக்கும் விதம் மற்றும் தரவு நுழைவு அறிக்கைகள் போன்றவற்றை விபரித்திருந்தார்.

தொடரந்து, மாகாண வைத்தியசாலைகள் தங்களது தங்களின் தரவுகள் அடிப்படையிலான செயற்பாடுகளையும் முன்வைத்து விபரிப்புக்களை மேற்கொடிருந்தனர். சுகாதாரத்துறையுடன் ஏனைய பொலிஸ் வீதி அபிவிருத்தி அதிகாரசபை மாநகரசபை பாடசாலைகள் ஏனைய அரசு சாரா நிறுவனங்களின் பங்களிப்பை பெற்றுக்கொள்ளல் ,வீதி விபத்து அதிகம் நடைபெறும் இடங்களை கண்காணித்து கூடிய கவனம் செலுத்தல் என்பன பற்றியும் திட்டமிடப்பட்டது.

மாகாண மற்றும் அமைச்சு அதிகாரிகளிடையே காயம் தடுப்பு நோக்கில் காத்திரமான உரையாடல்கள் கருத்துப்பரிமாற்றங்களுடன் நடைபெற்றதும் பல ஆலோசனைகள் முன்வக்கப்பட்டதும் இவ் மீளாய்வுக் கூட்டத்தின் வெற்றியாக அமைந்திருந்தது.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewsmattakkalappuseythikalSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் உயிரிழப்பு; பெண் கைது
செய்திகள்

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் உயிரிழப்பு; பெண் கைது

May 13, 2025
கொத்மலை பேருந்து விபத்து தொடர்பில் வெளியான தகவல்
செய்திகள்

கொத்மலை பேருந்து விபத்து தொடர்பில் வெளியான தகவல்

May 13, 2025
மட்டு நகரில் தேசிய வெசாக் வாரத்தினை முன்னிட்டு பல்வேறு நிகழ்வுகள்
செய்திகள்

மட்டு நகரில் தேசிய வெசாக் வாரத்தினை முன்னிட்டு பல்வேறு நிகழ்வுகள்

May 12, 2025
87 மில்லியன் ரூபா பெறுமதியான கேரள கஞ்சா பறிமுதல்
செய்திகள்

87 மில்லியன் ரூபா பெறுமதியான கேரள கஞ்சா பறிமுதல்

May 12, 2025
நுவரெலியாவில் அண்ணனை மண்வெட்டியால் தாக்கி கொலை செய்த தம்பி
செய்திகள்

நுவரெலியாவில் அண்ணனை மண்வெட்டியால் தாக்கி கொலை செய்த தம்பி

May 12, 2025
இந்தோனேசியாவில் மூழ்கிய கப்பல்; பலர் உயிரிழப்பு
உலக செய்திகள்

இந்தோனேசியாவில் மூழ்கிய கப்பல்; பலர் உயிரிழப்பு

May 12, 2025
Next Post
கடவுச்சீட்டு விண்ணப்பிக்கவுள்ள பொதுமக்களுக்கு பாதுகாப்பு அமைச்சரின் அறிவிப்பு!

கடவுச்சீட்டு விண்ணப்பிக்கவுள்ள பொதுமக்களுக்கு பாதுகாப்பு அமைச்சரின் அறிவிப்பு!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.