Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
திருகோணமலை திருக்கோணேஸ்வரர் ஆலய அம்மன் தாலி திருட்டு!

திருகோணமலை திருக்கோணேஸ்வரர் ஆலய அம்மன் தாலி திருட்டு!

9 months ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

வரலாற்றுச் சிறப்பு மிக்க திருகோணமலை திருக்கோணேஸ்வரர் ஆலயத்தில் பல கோடி ரூபா பெறுமதியான அம்மன் தாலி கொள்ளையிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சோழர் காலம் முதல் திருகோணேஸ்வர ஆலயத்தில் இருந்து வந்த குறித்த தாலி, போர்த்துக்கேயர் காலத்தில் ஆலயம் உடைக்கப்பட்ட போது சைவ சமயத்தினாரால் பல உயிர் தியாகங்கள் செய்யப்பட்டு காப்பாற்றப்பட்டு பாதுகாப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

இவ்வாறு பாதுகாக்கப்பட்டு வந்த தாலி, கடந்த வாரம் பகலில் கொள்ளையிடப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து பொதுமக்கள் குரலெழுப்ப தொடங்கினர்.

அதேவேளை திருக்கோணேஸ்வரர் ஆலய நிர்வாகத்தினர் இவ்விடயத்தை அமைதிப்படுத்தி பொதுமக்களை சமாதானம் செய்ய முயன்றனர்.

பல நூறு கோடி பெறுமதியான இரத்தினங்கள், வைடூரியங்கள் பொதிக்கப்பட்ட 5 சவரன் தாலி பல பூஜைகள் செய்யப்பட்டு சக்தி வாய்ந்ததாக இருந்தது எனவும் இதை எவராலும் ஈடு செய்ய முடியாது எனவும் பொதுமக்கள் தெரிவித்தனர்.

அம்மன் கழுத்தில் இருந்த தாலி திருட்டு போய், சிவனின் சக்தியை செயலிழக்க செய்யப்பட்ட சதியா ? இல்லையெனின் பல கோடி ரூபாய் மதிப்புள்ள தாலி விற்பனை செய்வதற்காகவா?” என பொது மக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

இது குறித்து பொறுப்பு கூறவேண்டிய தரப்பினரின் இதுவரை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யவில்லை என கூறப்படுகிறது.

அதேபோல் சோழர் காலத்தில் செய்யப்பட்ட பல நூறு கோடி மதிப்புடைய 16 பவும் வைரம், வைடூரியம் பொதிக்கப்பட்ட தங்க நகைகளும் கடந்த காலத்தில் கொள்ளையிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் இவ்விடயம் குறித்து சம்பந்தப்பட்ட தரப்பினரின் கவனத்திற்கு பொதுமக்களால் கொண்டு செல்லப்பட்டுள்ளது.

அதேவேளை, பொலிஸாருக்கும் பொதுமக்களால் முறைப்பாடு அளிக்கப்பட்டதை தொடர்ந்து விசாரணை தீவிரமாக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த விடயம் குறித்து பொதுமக்கள் ஆளுநர் செந்தில் தொண்டமானின் கவனத்திற்குக் கொண்டு சென்றுள்ளனர்.

கொள்ளையிடப்பட்ட தாலியை உடனடியாக மீட்டெடுக்க வேண்டும் எனவும், சம்பந்தப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் கிழக்கு மாகாண ஆளுநர் பொலிஸாருக்கு பணிப்புரை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Tags: BattinaathamnewsSrilankasrilankanewsTrinconews

தொடர்புடையசெய்திகள்

கொழும்பில் ஹெரோயினுடன் இரு இளைஞர்கள் கைது
செய்திகள்

கொழும்பில் ஹெரோயினுடன் இரு இளைஞர்கள் கைது

May 13, 2025
கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் உயிரிழப்பு; பெண் கைது
செய்திகள்

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் உயிரிழப்பு; பெண் கைது

May 13, 2025
கொத்மலை பேருந்து விபத்து தொடர்பில் வெளியான தகவல்
செய்திகள்

கொத்மலை பேருந்து விபத்து தொடர்பில் வெளியான தகவல்

May 13, 2025
மட்டு நகரில் தேசிய வெசாக் வாரத்தினை முன்னிட்டு பல்வேறு நிகழ்வுகள்
செய்திகள்

மட்டு நகரில் தேசிய வெசாக் வாரத்தினை முன்னிட்டு பல்வேறு நிகழ்வுகள்

May 12, 2025
87 மில்லியன் ரூபா பெறுமதியான கேரள கஞ்சா பறிமுதல்
செய்திகள்

87 மில்லியன் ரூபா பெறுமதியான கேரள கஞ்சா பறிமுதல்

May 12, 2025
நுவரெலியாவில் அண்ணனை மண்வெட்டியால் தாக்கி கொலை செய்த தம்பி
செய்திகள்

நுவரெலியாவில் அண்ணனை மண்வெட்டியால் தாக்கி கொலை செய்த தம்பி

May 12, 2025
Next Post
1700 ரூபா சம்பளம் வழங்க இணக்கம்!

1700 ரூபா சம்பளம் வழங்க இணக்கம்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.