Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
வீதியோரத்தில் நின்ற தாயையும்,மகளையும் மோதித்தள்ளிய வாகனம்; சம்பவ இடத்தில பலி!

வீதியோரத்தில் நின்ற தாயையும்,மகளையும் மோதித்தள்ளிய வாகனம்; சம்பவ இடத்தில பலி!

3 years ago
in செய்திகள்

வவுனியா – கன்னாட்டி பகுதியில் நேற்று (16) காலை இடம்பெற்ற வாகன விபத்தில் தாயும் அவரது 6 வயதான மகளும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா்.

நேற்று (16) காலை 7மணியளவில் கன்னாட்டி பகுதியில் இருந்து பூவரசங்குளம் பாடசாலைக்கு செல்வதற்காக குறித்த தாயும் மகளும் வீட்டிற்கு முன்னால் உள்ள வீதி ஓரத்தில் பேருந்துக்காக காத்திருந்தனர்.

இதன்போது வவுனியாவில் இருந்து மன்னார் பகுதி நோக்கி வேகமாக பயணித்த கென்ரர் ரக வாகனம் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து வீதி ஓரத்தில் நின்ற அவர்கள் மீது மோதியுள்ளதாக தொிவிக்கப்படுகிறது.

விபத்தில் தாயும், மகளும் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.

மற்றொரு சிறுவன் கென்ரர் ரக வாகனத்தை கண்டதும் ஓடிச்சென்று விபத்தை தவிர்த்துக்கொண்டதாக விபத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர்.

சம்பவத்தில் அதேபகுதியை சேர்ந்த 36 வயதான சிவலோகநாதன் சுபோகினியும் 6 வயதான அவரது மகள் டினுசிகாவும் உயிாிழந்தனா்.

குறித்த விபத்து இடம்பெற்ற போது கென்ரர் ரக வாகனத்தில் மூவர் பயணித்திருந்தனர்.

விபத்தை அடுத்து அவர்களில் ஒருவர் தப்பிச்சென்ற நிலையில், ஏனைய இருவரையும் பிரதேச மக்கள் சுற்றிவளைத்து பொலிசாரிடம் ஒப்படைத்தனர்.

இதேவேளை விபத்தையடுத்து பொறுமை இழந்த பொதுமக்கள் வாகனத்தை சராமரியாக தாக்கி சேதப்படுத்தியதுடன் அதனை எரிப்பதற்கு முற்ப்பட்டதாக தொிவிக்கப்படுகிறது.

இதனால் குறித்த பகுதியில் குழப்பமான சூழல் ஏற்ப்பட்டிருந்ததுடன் மன்னார் வீதியுடனான, போக்குவரத்தும் சிலமணிநேரங்கள் பாதிக்கப்பட்டிருந்ததாக எமது செய்தியாளா் தொிவித்தாா்.

சம்பவ இடத்திற்கு சென்ற பொலிசார் நிலமையை கட்டுப்படுத்தியதுடன் சடலங்களை மீட்டு வவுனியா வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்தனா்.

விபத்து தொடர்பான விசாரணைகளை பறையநாலங்குளம் பொலிசார் முன்னெடுத்து வருகின்றனர்.

தொடர்புடையசெய்திகள்

வீரகத்திப்பிள்ளையார் ஆலயத்திலிருந்து மாமாங்கேஸ்வரர் கொடிச்சீலை கொண்டுவரப்பட்டது
காணொளிகள்

வீரகத்திப்பிள்ளையார் ஆலயத்திலிருந்து மாமாங்கேஸ்வரர் கொடிச்சீலை கொண்டுவரப்பட்டது

August 2, 2026
மூதூரில் கோர விபத்தில் பல்கலை மாணவன் மற்றும் பிரான்ஸ் செல்லவிருந்த இளைஞன் பலி
செய்திகள்

மூதூரில் கோர விபத்தில் பல்கலை மாணவன் மற்றும் பிரான்ஸ் செல்லவிருந்த இளைஞன் பலி

August 2, 2026
தரமற்ற தலைக்கவசங்கள் உற்பத்தி மற்றும் விற்பனை செய்தால் சட்டநடவடிக்கை
செய்திகள்

தரமற்ற தலைக்கவசங்கள் உற்பத்தி மற்றும் விற்பனை செய்தால் சட்டநடவடிக்கை

August 2, 2026
16 ஆண்டுகளுக்குப் பிறகு பேராதனையில் பூத்த உலகின் மிகப்பெரிய ஓர்க்கிட் மலர்
செய்திகள்

16 ஆண்டுகளுக்குப் பிறகு பேராதனையில் பூத்த உலகின் மிகப்பெரிய ஓர்க்கிட் மலர்

August 2, 2026
மட்டக்களப்பில் “கூரிய பார்வை, சிறந்த கற்றல்” திட்டத்தின் ஆரம்ப நிகழ்வு
செய்திகள்

மட்டக்களப்பில் “கூரிய பார்வை, சிறந்த கற்றல்” திட்டத்தின் ஆரம்ப நிகழ்வு

August 2, 2026
அஸ்வெசும கொடுப்பனவில் மோசடி செய்த இரு பெண் அதிகாரிகளுக்கு விளக்கமறியலில்
செய்திகள்

அஸ்வெசும கொடுப்பனவில் மோசடி செய்த இரு பெண் அதிகாரிகளுக்கு விளக்கமறியலில்

August 2, 2026
Next Post
நீங்கள் ட்ரூகாலர் பாவனையாளரா? ;இது புதுசு!

நீங்கள் ட்ரூகாலர் பாவனையாளரா? ;இது புதுசு!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு