பிரபல தொழிலதிபர் எலான் மஸ்க் பிரித்தானியாவில் நடந்து வரும் கலவரம் குறித்து தனது எக்ஸ் தளத்தில் சர்ச்சைக்குரிய பதிவொன்றை பதிவிட்டுள்ளார்.
குறித்த பதிவில் அவர் “பிரித்தானியாவில் 2030ஆம் ஆண்டு நீங்கள் ஒரு meme பதிவிடுவதற்காக தூக்கிலிடப்படலாம்.” என கூறியுள்ளார்.
பிரித்தானியாவில் ஒருமாத கால தொழிற்கட்சி ஆட்சியின் பின்னர், கட்சிக்குச் சிக்கல் தரும் வகையில் இப்போது மிகப்பெரிய வன்முறை போராட்டங்கள் வெடித்துள்ளன.
பல நகரங்களில் கலவரங்கள் வெடித்ததால் அமைதியின்மை நிலவி வருகிறது. இந்நிலையில் நிகழ்நிலை வழியாக வெறுப்பினை தூண்டியதாக கைது செய்யப்பட்ட ஜோர்டான் பார்லர் என்ற நபர் சிறைப்படுத்தப்பட்டுள்ளார்.
இதனையடுத்தே பிரித்தானியாவில் நிலவும் சூழல் குறித்து எலான் மஸ்க் இந்த பதிவை வெளிப்படுத்தியுள்ளார்.