யாழ்ப்பாணத்தில் தனிமையில் வசித்த மூதாட்டி ஒருவர், சந்தேகத்திற்கு இடமான முறையில், உயிரிழந்துள்ள நிலையில் , அயல் வீட்டு இளைஞன் சந்தேகத்தில் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கபப்டுகின்றது.
சம்பவத்தில் மீசாலை வடக்கு பகுதியைச் சேர்ந்த நடேசப்பிள்ளை சரஸ்வதியம்பாள் (வயது 80) என்பவரே உயிரிழந்துள்ளார்.
மூதாட்டி சந்தேகத்திற்கு இடமான முறையில் உயிரிழந்த நிலையில் நேற்றைய தினம் (11) சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த கொடிகாமம் பொலிஸார் மூதாட்டியின் வீட்டிற்கு அருகில் வசித்து வந்த இளைஞனை கைது செய்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.