Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
1,000 மில்லியன் ரூபா நட்டஈடு கோரியுள்ள விமல் வீரவன்ச!

1,000 மில்லியன் ரூபா நட்டஈடு கோரியுள்ள விமல் வீரவன்ச!

2 years ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தனது நற்பெயருக்கு ஏற்பட்ட சேதத்திற்காக 1,000 மில்லியன் ரூபா நட்டஈடு கோரி குடிவரவு மற்றும் குடியகல்வு அதிகாரிகள் இருவருக்கு எதிராக கொழும்பு மாவட்ட நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்துள்ளார்.

கடந்த நல்லாட்சி அரசாங்கத்தின் போது காரணமின்றி குடிவரவு குடியகல்வு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டதாகவும், நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்து தனது நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த வழக்கில் நேற்று (12) பிரதிவாதிகளாக குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் அதிகாரி எரங்க ரம்புக்வெல்ல, சிரேஷ்ட அதிகாரி சுஜீவ ரத்நாயக்க மற்றும் சட்டமா அதிபர் ஆகியோர் குறிப்பிடப்பட்டுள்ளனர்.

2015 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 23 ஆம் திகதி வெளிநாடுகளில் நடைபெறவிருந்த மாநாடுகளில் பங்கேற்பதற்காக டுபாய் செல்வதற்காக கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்ததாக குறித்த மனுவின் மூலம் பாராளுமன்ற உறுப்பினர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதன்போது, வெளிநாடு செல்வதற்காக இராஜதந்திர கடவுச்சீட்டை வழங்கியதாகவும், அங்குள்ள குடிவரவு மற்றும் குடியகல்வு அதிகாரிகள் அதை சரிபார்த்து அது செயலற்ற கடவுச்சீட்டு என அறிவித்ததாகவும் முறைப்பாட்டில் குறிப்பிட்டுள்ளார்.

பின்னர், குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளால் எவ்வித நியாயமான காரணமும் இன்றி கைது செய்யப்பட்டு நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டதாக அவர் சுட்டிக்காட்டினார.

இதனால் தனது நற்பெயருக்கு களங்கம் விளைவித்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.

அதன்படி, நியாயமான விசாரணை நடத்தாமல், தீங்கிழைக்கும் வகையில் கைது செய்து, வழக்குப்பதிவு செய்ததன் மூலம் தனது நற்பெயருக்கு ஏற்பட்ட களங்கத்திற்காக பிரதிவாதிகளிடமிருந்து 1,000 மில்லியன் ரூபா நட்டஈடு கோரி பாராளுமன்ற உறுப்பினர் இந்த வழக்கை தாக்கல் செய்துள்ளார்.

Tags: BattinaathamnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

கற்பிட்டியில் சட்டவிரோதமாக சங்கு பதுக்கிய இருவர் கைது!
செய்திகள்

கற்பிட்டியில் சட்டவிரோதமாக சங்கு பதுக்கிய இருவர் கைது!

August 1, 2026
மீன்பிடிக்க சென்றவர் காட்டு யானைத் தாக்கி பலி!
செய்திகள்

மீன்பிடிக்க சென்றவர் காட்டு யானைத் தாக்கி பலி!

August 1, 2026
சாய்ந்தமருதில் பிரபல உணவகத்தில் பாரிய தீ விபத்து; தீயணைப்பு சேவை தாமதம் என மக்கள் குற்றச்சாட்டு!
செய்திகள்

சாய்ந்தமருதில் பிரபல உணவகத்தில் பாரிய தீ விபத்து; தீயணைப்பு சேவை தாமதம் என மக்கள் குற்றச்சாட்டு!

August 1, 2026
மின்னல் தாக்கிய சில நொடிகளில் தீப்பிடித்த வீடு
செய்திகள்

மின்னல் தாக்கிய சில நொடிகளில் தீப்பிடித்த வீடு

August 1, 2026
“சாரை பாம்புக்கு மண்ணெண்ணெய் ஊற்றினால் பதறுவது போல எதிர்க்கட்சிகள் செயற்படுகின்றன”; எம்.பி. கந்தசாமி பிரபு
செய்திகள்

“சாரை பாம்புக்கு மண்ணெண்ணெய் ஊற்றினால் பதறுவது போல எதிர்க்கட்சிகள் செயற்படுகின்றன”; எம்.பி. கந்தசாமி பிரபு

August 1, 2026
கொழும்பு கடற்பரப்பில் 17 கொள்கலன்கள் கடலில் விழுந்தன; மீனவர்களுக்கு அவசர எச்சரிக்கை!
செய்திகள்

கொழும்பு கடற்பரப்பில் 17 கொள்கலன்கள் கடலில் விழுந்தன; மீனவர்களுக்கு அவசர எச்சரிக்கை!

August 1, 2026
Next Post
தலங்கம பகுதியில் ஐஸ் போதைப்பொருளுடன் ஒருவர் கைது!

தலங்கம பகுதியில் ஐஸ் போதைப்பொருளுடன் ஒருவர் கைது!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு