ராகம பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் ஹெரோயின் போதைப்பொருட்களுடன் இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக ராகம பொலிஸார் தெரிவித்தனர்.
ராகம பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ராகம மற்றும் கெந்தலியத்தபாலுவ ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த 40 மற்றும் 41 வயதுடைய இருவரே கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களில் ஒருவரிடமிருந்து 11 கிராம் 220 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருளும் மற்றையவரிடமிருந்து 05 கிராம் 180 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருளும் கைப்பற்றப்பட்டுள்ளன.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை ராகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.