பல ஆண்டுகளுக்குமுன் இலங்கையிலிருந்து சுவிட்சர்லாந்துக்கு கொண்டுவரப்பட்ட யானை ஒன்றைக் கருணைக்கொலை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.
1976ஆம் ஆண்டு மார்ச் மாதம் இலங்கையிலிருந்து சுவிட்சர்லாந்துக்கு செய்லா ஹிமாலி (Ceyla-Himali) என்னும் பெண் யானை கொண்டு செல்லப்பட்டது.
அப்போது அவளுக்கு ஒரு வயது கூட ஆகவில்லை. சுவிட்சர்லாந்தில் சூரிச்சில் ஒரு விலங்கியல் பூங்காவில் வாழ்ந்துவந்த செய்லா ஹிமாலி (Ceyla-Himali) பின்பு ஆறு குட்டிகளை ஈன்றதுடன், பல குட்டி யானைகளை வளர்க்கவும் உதவினாள்.
ஆனால், தற்போது செய்லா ஹிமாலியாவினால் சரியகாக நிற்கக்கூட முடியவில்லை. அவளுக்கு ஜூலை மாதம் 1ஆம் திகதி 49ஆவது வயது பிறந்தது.
வயதானதால் பல பிரச்சினைகள் ஏற்பட்டதுடன், செய்லா ஹிமாலியின் சிறுநீரகங்களும் சரியாக இயங்கவில்லை.
ஆகவே, செய்லா ஹிமாலியின் உடல் நிலையை ஆராய்ந்த மருத்துவர்கள், அவளது நலன் கருதி அவளை கருணைக்கொலை செய்வதென நேற்று (12) முடிவு செய்துள்ளார்கள்.
இப்போது சூரிச் விலங்கியல் பூங்காவில் செய்லா ஹிமாலியின் இரண்டு மகள்களான பனங் பர்ஹா மற்றும் டாய் என்னும் ஆண் யானையும் வாழ்ந்து வருகிறது.