சுவீடனில் குரங்கம்மை என்ற எம்பொக்ஸ் நோயுடன் முதலாவது நபர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுவீடன் பொதுச் சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது.
ஆபிரிக்காவில் குரங்கம்மை பரவல் அதிகரித்துள்ள நிலையில், பொதுச் சுகாதார அவசரகால நிலையாக உலக சுகாதார ஸ்தாபனத்தினால் பிரகடனப்படுத்தப்பட்டது.
ஆபிரிக்காவில்அவசரகால நிலை பிரகடனப்படுத்தப்பட்ட சில மணிநேரங்களிலேயே சுவீடனிலும் இந்த நோய் அடையாளம் காணப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நோய் நிலைமை திரிபடைந்துள்ளதுடன் உயிரிழப்பு வீதமும் அதிகரித்துள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
எம்பொக்ஸ் நோய் நிலைமை வேகமாகப் பரவுவதற்கான சாத்தியம் நிலவுவதாக உலக சுகாதார ஸ்தாபனத்தின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் எச்சரிக்கை விடுத்துள்ளார்.