பாகிஸ்தானில் கடந்த ஜூலை 1-ஆம் திகதி முதல் கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில் சிக்கி உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 209-ஆக அதிகரித்துள்ளது.
இது குறித்து அதிகாரிகள் கூறியதாவது;
மழை வெள்ளம் தொடா்பான சம்பவங்களில் பஞ்சாப் மாகாணத்தில் மட்டும் கடந்த 24 மணி நேரத்தில் 24 போ் உயிரிழந்தனா். இத்துடன் இந்த பருவமழை காரணமாக உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 209-ஆக அதிகரித்துள்ளது என்று அதிகாரிகள் கூறினா்.
பாகிஸ்தானில் ஜூலை முதல் செப்டம்பா் வரை பருவமழை பெய்வது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு பருவமழை அளவுக்கு அதிகமாகப் பெய்துவருவதாகக் கூறப்படுகிறது. பருவநிலை மாற்றம் காரணமாகவே இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக நிபுணா்கள் கூறுகின்றனா்.