Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
இலங்கையில் கைது செய்யப்பட்ட 35 இந்திய மீனவர்களுக்கு விளக்கமறியல் நீடிப்பு!

இலங்கையில் கைது செய்யப்பட்ட 35 இந்திய மீனவர்களுக்கு விளக்கமறியல் நீடிப்பு!

2 years ago
in செய்திகள்

இலங்கைக் கடற்பரப்புக்குள் எல்லை மீறி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 35 இந்திய மீனவர்களையும் அடுத்த மாதம் 04 ஆம் திகதி வரை விளக்கயறியலில் வைக்குமாறு புத்தளம் மாவட்ட நீதிமன்றம் நேற்று (21) உத்தரவிட்டுள்ளது.

இலங்கைக் கடற்பரப்புக்குள் எல்லை தாண்டி கற்பிட்டி வடக்கு கடற்பரப்பில் குதிரமலை பகுதியில் மீன்பிடியில் ஈடுபட்டு வந்த நிலையில் கடற்படையினரால் கடந்த 08 ஆம் திகதி கைது செய்யப்பட்ட 35 இந்திய மீனவர்களும் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட போது அவர்களை 21 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு புத்தளம் மாவட்ட மேலதிக நீதிவான் டி.எல்.ஏ.என். விமலரத்ன உத்தரவிட்டிருந்தார்.

நான்கு படகுகளில் இந்தியா தமிழகம் பகுதியில் இருந்து மீன்பிடித் தொழிலுக்காக வருகை தந்த மீனவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

குறித்த இந்திய மீனவர்கள் 35 பேரும் எல்லை தாண்டி புத்தளம் – கற்பிட்டி வடக்கு குதிரமலை கடற்பகுதியில் மீன்பிடியில். ஈடுபட்டுக் கொண்டிருந்த போது கடந்த 08 ஆம் திகதி கடற்படையிரால் கைது செய்யப்பட்டனர்.

மேலும், குறித்த இந்திய மீனவர்கள் பயணித்த நான்கு விசைப் படகுகளும், மீன்பிடிப்பதற்குப் பயண்படுத்தப்பட்ட உபகரணங்களும் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

இவ்வாறு கைது செய்யப்பட்ட 35 மீனவர்களும் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக கற்பிட்டி பிரதேச கடற்தொழில் நீரியல் வளத்துறை திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்ட பின்னர் அவர்கள் கடந்த 09 ஆம் திகதி புத்தளம் மாவட்ட நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

சட்டவிரோதமாக இலங்கை எல்லைக்குள் நுழைந்தமை தொடர்பில் இந்த 35 இந்திய மீனவர்களுக்கும் எதிராக வழக்குத் தொடரப்பட்டது.

இதன்போது சந்தேக நபர்களான இந்திய மீனவர்கள் 35 பேரையும் மேலதிக விசாரணைகளுக்காக தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு புத்தளம் மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதேவேளை, இலங்கைக் கடற்பரப்புக்குள் எல்லை தாண்டி மீன்பிடியில் ஈடுபட்ட 22 இந்திய மீனவர்கள் கடந்த 05 கற்பிட்டியின் வடக்கே குதிரமலைப் பகுதியில் வைத்து கடற்படையினரால் கைது செய்யப்பட்டதுடன், அவர்கள் அனைவரும் புத்தளம் மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் அவர்கள் 03 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

மேலும் இந்த வருடம் இதுவரை மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளின் மூலம் இலங்கையில் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட 44 இந்திய மீன்பிடி படகுகளை கைப்பற்றியுள்ளதுடன், 322 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக கடற்படையினர் தெரிவித்தனர்.

Tags: BattinaathamnewsindiaSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

மக்களின் பாரிய வரிப்பணம் இலங்கையிலிருந்து வெளிநாட்டிற்கு கடத்தப்பட்டது அம்பலமானது
செய்திகள்

மக்களின் பாரிய வரிப்பணம் இலங்கையிலிருந்து வெளிநாட்டிற்கு கடத்தப்பட்டது அம்பலமானது

July 22, 2026
கல்லடி மெதடிஸ்த திருச்சபை வாலிபர்களின் ஏற்பாட்டில் இரத்ததான முகாம்
செய்திகள்

கல்லடி மெதடிஸ்த திருச்சபை வாலிபர்களின் ஏற்பாட்டில் இரத்ததான முகாம்

July 22, 2026
மட்டக்களப்பில் காணாமல்போனோர் தொடர்பில் விசாரணை
செய்திகள்

மட்டக்களப்பில் காணாமல்போனோர் தொடர்பில் விசாரணை

July 22, 2026
பாடசாலைக்கு ஒழுங்காக செல்லாத மாணவர்கள் கைது
செய்திகள்

பாடசாலைக்கு ஒழுங்காக செல்லாத மாணவர்கள் கைது

July 22, 2026
செம்மணி புதைக்குழி; உண்மைகள் வெளிவர தடையில்லை என்கிறது அரசாங்கம்!
செய்திகள்

செம்மணி புதைக்குழி; உண்மைகள் வெளிவர தடையில்லை என்கிறது அரசாங்கம்!

July 22, 2026
மின்சார வாகன இறக்குமதி அனுமதிப்பத்திர முறையில் முறைகேடு; ராஜபக்ச புதல்வர்கள் தொடர்பில் குற்றச்சாட்டு!
செய்திகள்

மின்சார வாகன இறக்குமதி அனுமதிப்பத்திர முறையில் முறைகேடு; ராஜபக்ச புதல்வர்கள் தொடர்பில் குற்றச்சாட்டு!

July 22, 2026
Next Post
விலகிய எவரையும் இணைத்துக்கொள்ள முடியாது; மஹிந்த திட்டவட்டம்!

விலகிய எவரையும் இணைத்துக்கொள்ள முடியாது; மஹிந்த திட்டவட்டம்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.