கோழி இறைச்சி மற்றும் முட்டையின் விலையில் மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என்று அகில இலங்கை முட்டை வர்த்தக சங்கத்தின் தலைவர் அன்ரன் நிஷாந்த அப்புஹாமி தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக கருத்து வெளியிட்டுள்ள அகில இலங்கை முட்டை வர்த்தக சங்கத்தின் தலைவர் என்டன் நிஷாந்த அப்புஹாமி,
ஒரு கிலோகிராம் கோழி இறைச்சியை 900 ரூபாவுக்கும், முட்டை ஒன்றை 35 ரூபாவுக்கும் விற்பனை செய்ய முடியும் எனத் தெரிவித்துள்ளார்.
உற்பத்தியாளர்கள் முட்டை மற்றும் கோழி இறைச்சி என்பனவற்றை அதிக இலாபத்துடன் சந்தைக்கு வழங்குவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்நிலையில், அதிகரித்து வரும் கோழி இறைச்சி விலையை கட்டுப்படுத்துவதற்காக விடயத்துடன் தொடர்புடைய தரப்பினருடன் கலந்துரையாடப்பட்டுள்ளதாக வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
அத்தோடு, முட்டை உற்பத்தியை அதிகரிப்பதற்காக நாடளாவிய ரீதியில் கோழிக் குஞ்சுகளை வழங்குவதற்கான வேலைத்திட்டம் ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.