எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்ரமசிங்கவிற்கு, நாடாளுமன்ற உறுப்பினர்களான சரிதி துஷ்மந்த மற்றும் அங்கஜன் இராமநாதன் ஆகியோர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மைத்திரி அணியை பிரதிநிதித்துவப்படுத்திய இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்களான குறித்த இருவரும், ஆதரவு தெரிவிக்க முன்வந்துள்ளனர்.
கொழும்பிலுள்ள ஜனாதிபதியின் அரசியல் காரியாலயத்தில் வைத்து ஜனாதிபதியை சந்தித்த இருவரும் தமது ஆதரவை வழங்குவதாக தெரிவித்துள்ளனர்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பதில் செயலாளராக சரிதி துஷ்மந்த அண்மையில் நியமிக்கப்பட்டார்.
சரிதி துஷ்மந்த 2015ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று கேகாலை மாவட்டத்தில் இருந்து முதன்முறையாக நாடாளுமன்றத்துக்குத் தெரிவானவராவார்.
மேலும், அவர் 2020 இல் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன சார்பில் நாடாளுமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.
அங்கஜன் இராமநாதன் 2015 ஆம் ஆண்டு தேசியப்பட்டியலை பிரதிநிதித்துவப்படுத்தி நாடாளுமன்றத்திற்கு முதன்முதலில் தகுதி பெற்றார்.
கடந்த நாடாளுமன்ற தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தி நாடாளுமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.
அதேசமயம் கொழும்பு மால் வீதியிலுள்ள ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் அரசியல் காரியாலயத்தில் வைத்து ஜனாதிபதியை சந்தித்த இருவரும் தமது ஆதரவை வழங்குவதாக தெரிவித்தனர்.