Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
தலைவர் காட்டிய சின்னம் தமிழரசு கட்சியின் வீட்டுச் சின்னம்- மக்களுக்கு சரியான பாதையை காட்டுவோம்; சாணக்கியன்!

தலைவர் காட்டிய சின்னம் தமிழரசு கட்சியின் வீட்டுச் சின்னம்- மக்களுக்கு சரியான பாதையை காட்டுவோம்; சாணக்கியன்!

9 months ago
in அரசியல், செய்திகள், மட்டு செய்திகள், முக்கிய செய்திகள்

இந்த ஜனாதிபதி தேர்தலுக்கான சரியான முடிவுகளை எடுத்து அறிவிப்போம். மக்கள் அதற்கான அங்கிகாரத்தையும், ஆதரவுகளையும் தருவார்கள் அதனால் எதிர்வரும் 5 வருடத்திற்கு திடமான பலத்தை கொண்டுவரமுடியும் என்று மட்டக்களப்பு தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் தெரிவித்தார்.

களுவன்கேணி சிங்கார தோப்பு ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயத்துக்கு பன்முகப்படுத்தப்பட்ட நிதியில் மூன்று லட்சம் ரூபாய் ஏற்கனவே ஒதுக்கியிருந்த நிலையில், குறித்த பகுதி ஆலய நிர்வாகம் மற்றும் பொதுமக்களுடன் ஆன சந்திப்பு இடம்பெற்றது. இவ் நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.

மேலும் இது தொடர்பில் அவர் தெரிவிக்கையில்,

மீனவரிகளுடைய பிரச்சனை அவசியம் தீர்க்கப்பட வேண்டிய விடயம், அதனை தீர்க்கவேண்டிய அமைச்சர்கள் அதனை தீர்ப்பதற்கு எந்தவொரு கரிசனையும் எடுக்கவில்லை. இந்த மீனவர்களின் பிரச்சனையை தீர்க்கமால் அவர்களை ஜனாதிபதி தேர்தலுக்கான பிரச்சார நடவக்கைக்கு அனும்பும் செயற்பாட்டில் ஈடுபட்டுள்ளதாக அறிந்தேன்.மதிய உணவிற்கான டோக்கன், ஒரு ரீ சேட், போக்குவரத்திற்கான காசு என்பன வழங்கப்பட்டுள்ளன.

ஜனாதிபதி தேர்தலை யாரும் கேட்கட்டும் ஆனால் தமிழரசு கட்சி ஆகிய நாங்கள் முடிவு எடுக்கவில்லை. ஜனாதிபதி தேர்தலுக்கு களுவன்கேணியில் இருந்து ஒரு பஸ் தேவைப்படுகிறது. அவர்கள் கஸ்டப்பட்டாலும் பரவாயில்லை என்ற நிலைதான் காணப்படுகிறது.

மீனவர்களுடைய பிரச்சனையை நாம் தான் பார்க்கவேண்டும். இது தான் இன்றைய நிலமை.
ஏறாவூரில் ஜனாதிபதி கூட்டத்துக்கு மீன்பிடி அமைச்சர் சீரியல் இலக்கம் கொடுத்து டோக்கன் கொடுத்து இருக்கின்றார்.

இந்த ஜனாதிபதி தேர்தல்தான் அடுத்த 5 வருடத்தை தீர்மானிக்கப்போகின்றது. இந்த தேர்தலில் நாங்கள் என்ன தீர்மானத்தை எடுக்கப் போகிறோம் என்பதுதான் எமது எதிர்காலத்தை தீர்மானிக்கப்போகிறது

2019 இல் கோத்தபாயவிற்கு வாக்களித்தால்தான் நாடு நல்லா இருக்கும் என் சிலர் இதே கிராமத்திற்கு வந்தார்கள்.அவர்கள் இன்று இராஜாங்க அமைச்சர்களாக இருக்கிறார்கள். அதே ஆட்கள் இன்று புதிதாக ஒருவரை கொண்டு வருகிறார்கள்.நாளைக்கு இன்னுமொருவரை கொண்டு வருவார்கள். ஆனால் தமிழ் மக்களாகிய நாங்கள் இவர்களுடைய கருத்துக்களை எல்லாம் கேட்கக் கூடாது.

தலைவர் காட்டிய சின்னம் தமிழரசு கட்சியின் வீட்டுச் சின்னமாகும். நாங்கள் என்ன தீர்மானம் எடுக்கின்றோமோ அதனுடன்தான் நாங்கள் இருக்க வேண்டும்.நாங்கள் சரியான பாதையை மக்களுக்கு காட்டுவோம்.

ஒரு ராஜாங்க அமைச்சரின் செயலாளர் இலஞ்சம் வாங்கி சிறையில் உள்ளார். அதுபோன்று பிள்ளையானின் இணைப்பு செயலாளர் சிறையில். இதில் இந்னுமொரு கோஷ்டி தமிழ் பொதுவேட்பாளர் என்று ஒருவரை வைத்து படம் காட்டியுள்ளார்கள்.

இந்த நாட்டிலே தமிழர் ஒருவர் வெல்ல முடியுமா?. சனத்தொகையின் அடிப்படையில் சாத்திமாகமா? மக்கள் வாக்களிப்பார்களா?. இவர்கள் தமிழர்களின் எதிர்காலத்தை அழிக்கும் செயற்பாடாக களம் ஒருவரை இறக்குகிறார்கள்.

பொலிகண்டியிலிருந்து தேர்தல் ஆரம்பித்திருக்கின்றார்கள்.இதெல்லாம் நடைமுறைக்கு சாத்தியமான விடயங்கள். வடமாகாணத்தின் அரசியல் நிலைப்பாடுகள் வேறு விதமாகவும், கிழக்கின் நிலமை வேறாகவும் காணப்படகிறது.

கிழக்கில் வடக்கு போன்று அல்லாது பல்வேறுபட்ட சமூகங்கள் வாழ்கின்றார்கள்.இந்த நிலையில் பிரதான வேட்பாளர் ஒருவரை ஆதரிக்காமல் பொது வேட்பாளரை ஆதரிப்போம் என்றால் நாளைக்கு கிழக்கு மாகாணத்தில் பலம் இழந்த சமூகமாகவே காணப்படுவோம்.என்றார். க.ருத்திரன்.

Tags: BattinaathamnewselectionpoliticalnewsSrilankasrilankanewstna

தொடர்புடையசெய்திகள்

காங்கேசன்துறையில் குஷ் போதைப்பொருளுடன் சந்தேகநபர் கைது
செய்திகள்

காங்கேசன்துறையில் குஷ் போதைப்பொருளுடன் சந்தேகநபர் கைது

May 17, 2025
மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரிடம் பெண்ணியம் சார் செயற்பாட்டாளர்கள் மகஜர் வழங்கி வைப்பு
செய்திகள்

மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரிடம் பெண்ணியம் சார் செயற்பாட்டாளர்கள் மகஜர் வழங்கி வைப்பு

May 17, 2025
கடுவெல நீதவானாக பணியாற்றிய சானிமா விஜயபண்டாரவின் அலுவலகம் சீல் வைப்பு
செய்திகள்

கடுவெல நீதவானாக பணியாற்றிய சானிமா விஜயபண்டாரவின் அலுவலகம் சீல் வைப்பு

May 17, 2025
ஒடிசா மாநிலத்தில் மின்னல் தாக்கியதில் 9 பேர் பலி
உலக செய்திகள்

ஒடிசா மாநிலத்தில் மின்னல் தாக்கியதில் 9 பேர் பலி

May 17, 2025
முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை முன்னிட்டு நவாலி சென் பீற்றர்ஸ் தேவாலயத்தில் நினைவஞ்சலி
செய்திகள்

முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை முன்னிட்டு நவாலி சென் பீற்றர்ஸ் தேவாலயத்தில் நினைவஞ்சலி

May 17, 2025
டிஜிட்டல் பொருளாதார தீர்வுகளை துரிதப்படுத்துமாறு அமைச்சின் அதிகாரிகளுக்கு ஜனாதிபதி அநுர அறிவுறுத்தல்
செய்திகள்

டிஜிட்டல் பொருளாதார தீர்வுகளை துரிதப்படுத்துமாறு அமைச்சின் அதிகாரிகளுக்கு ஜனாதிபதி அநுர அறிவுறுத்தல்

May 17, 2025
Next Post
அரச ஊழியர்களுக்கு தமிழ் பொது வேட்பாளர் அரியநேத்திரனின் வேண்டுகோள்!

அரச ஊழியர்களுக்கு தமிழ் பொது வேட்பாளர் அரியநேத்திரனின் வேண்டுகோள்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.