சீன இராணுவத்தின் மூன்று போர்க்கப்பல்கள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இன்று (26) கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தன.
“HE FEI”, “WUZHISHAN” மற்றும் “QILIANSHAN” என்ற போர்க்கப்பல்கள் இலங்கை கடற்படையினரால் வரவேற்கப்பட்டன.
சீன இராணுவத்தின் போர்க்கப்பல்களின் முப்படையின் கட்டளை அதிகாரிகள் மேற்கு கடற்படை கட்டளைத் தலைமையகத்தில் உள்ள மேற்கு கடற்படைப் பகுதி தளபதி ரியர் அட்மிரல் சிந்தக குமாரசிங்கவை சந்திக்க உள்ளனர்.
இரு கடற்படையினருக்கும் இடையிலான நட்புறவை வலுப்படுத்தும் வகையில், இலங்கை கடற்படையினரால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள தொடர் நிகழ்ச்சிகளில் இந்தக் கப்பல்களின் பணியாளர்கள் பங்கேற்க உள்ளனர்.
மேலும், கப்பல்களின் பணியாளர்கள் கொழும்பில் தங்கியிருக்கும் போது நாட்டின் சில சுற்றுலாத் தலங்களுக்கு செல்லவுள்ளதுடன் இலங்கை கடற்படையினர் கப்பல்களின் செயற்பாடுகள் குறித்த விளக்கக்காட்சிகளில் பங்கேற்கும் வாய்ப்பைப் பெறுவார்கள்.
உத்தியோகபூர்வ விஜயத்தை முடித்துக் கொண்டு, சீன இராணுவத்தின் போர்க்கப்பல்கள் கொழும்பு கடற்கரையில் இலங்கை கடற்படைக் கப்பலுடன் கடவுப் பயிற்சிக்குப் (PASSEX) பின்னர் வியாழக்கிழமை (29) இலங்கையிலிருந்து புறப்படவுள்ளது.