Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
அவுஸ்திரேலியாவில் இலங்கை தமிழ் புகலிடக்கோரிக்கையாளர் தற்கொலை; தமிழ் அகதிகள் பேரவை முன்வைத்துள்ள குற்றச்சாட்டு!

அவுஸ்திரேலியாவில் இலங்கை தமிழ் புகலிடக்கோரிக்கையாளர் தற்கொலை; தமிழ் அகதிகள் பேரவை முன்வைத்துள்ள குற்றச்சாட்டு!

9 months ago
in உலக செய்திகள், செய்திகள், முக்கிய செய்திகள்

இலங்கையை சேர்ந்த தமிழ் புகலிடக்கோரிக்கையாளர் தற்கொலை செய்துகொண்டுள்ள நிலையில் அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் புகலிடக்கொள்கையே அவரின் மரணத்திற்கு காரணம் என தமிழ் அகதிகள் பேரவை தெரிவித்துள்ளது.

இது குறித்து தமிழ் அகதிகள் பேரவை மேலும் தெரிவித்துள்ளதாவது,

தன்னைத் தானே தீக்கிரையாக்கிக் கொண்டு இளைஞன் மரணம். 23 வயதேயான இந்த இளைஞனை ஆஸ்திரேலியா அரசாங்கமும், அரசாங்கத்தின் அகதிகள் மீதான மோசமான கொள்கைகளுமே படுகொலை செய்துள்ளது.

அவனது மரணப்படுக்கையின் கடைசி நொடிகளில் அவரோடு கூட இருந்த ரதி கூறியது இதுதான். “பல எதிர்கால கனவுகளோடும், வாழ்க்கையை வாழ வேண்டும் என்ற இலட்சியத்தோடும் வாழ்ந்த 23 வயதான இளைஞன் மனோ. உள்நாட்டுப் போரில் பாதுகாப்புத் தேடி வந்த ஒரு இளைஞனை இந்த நாட்டின் மனிதத் தன்மையற்ற அகதிகளுக்கு விரோதமான போக்கு, அதன் மூலம் அவன் சந்தித்த தனிப்பட்ட, சமூகப் பிரச்சனைகள் வாழ்வின் மீதான நம்பிக்கை இழக்கச் செய்ததோடு இனி வாழ்வதே வீணென்று இத்தகைய பாரதூரமான முடிவை எடுக்கச் செய்துள்ளது.

கடந்த 12 ஆண்டுகளில் எத்தனையோ அப்பாவி அகதிகளின் அகால மரணங்களை நாங்கள் கடந்து வந்துள்ளோம் . இதோ இன்று இன்னொரு இளைஞன். இன்றைக்கு போராடிக் கொண்டிருக்கும் பல தமிழ் அகதிகள் போல் பாதுகாப்பற்ற வாழ்க்கையை வாழ்ந்து கொண்டு ஒவ்வொரு நாள் விடியலையும் தங்களுக்கு மாற்றம் ஏற்பட்டு விடும் என்று கனவுகளோடு; இங்கிருந்து ஆபத்து நிறைந்த தங்கள் நாட்டிற்கு நாடு கடத்தப்பட்டு விடுவோமோ என்ற பயத்தோடும் வாழ்ந்து கொண்டிருக்கும் பல அகதிகளின் ஒருவரின் மரணம் இது.”

கிறிஸ்துவ குடும்பத்தை பின்னணியாகக் கொண்ட மனோ இலங்கை இனவழிப்பு போரின் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டு குடும்பமாக தனது பன்னிரண்டாவது வயதில் அவரது நான்கு சகோதரர்களோடு 2013 ஆம் ஆண்டு கப்பல் வழிப் பயணத்தால் ஆஸ்திரேலிய வந்தடைந்தார். இங்கு வந்து பல மாத தடுப்பு காவலுக்கு பிறகு சமூகத்திற்கு விடுவிக்கப்பட்டார்.

செவ்வாய் அன்று தனக்குத்தானே தீயிட்டுக் கொளுத்தி 80 சதவீத தீக்காயங்களுடன் மருத்துவமனையில்( Alfred Hospital, Melbourne) அனுமதிக்கப்பட்ட இன்று 12:27 மணி அளவில் தன் மூச்சை நிறுத்திக் கொண்டான் அந்த இளைஞன்.

மகிழ்ச்சியாக சாமானியமான வாழ்க்கையை வாழ வேண்டிய ஒரு இளைஞனை இத்தகைய மன உளைச்சலுக்கு உள்ளாக்கி அவன் தனது உயிரை மாய்த்துக் கொள்ளும் அளவுக்கு தள்ளியுள்ளது இந்த நிரந்தரமற்ற அகதி வாழ்க்கை.

ஆஸ்திரேலியா அரசாங்கம் இத்தனை ஆண்டுகளாகியும் தஞ்ச கோரிக்கையை அங்கீகரிக்காத பட்சத்தில் மேலும் இலங்கைக்கு அகதிகளை அனுப்ப முற்படும் என்றால் இங்கிருந்து மரணிப்பதே மேல் என்று பல அகதிகள் எண்ணங்கள் மாறி இருப்பது அவர்கள் வாழ்வின் மீதான பேர் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.‌ இத்தகைய சோர்வடைந்த வார்த்தைகள் வெறும் வார்த்தைகள் அல்ல உண்மையான மனநிலை என்று ஒரு இளைஞன் தன் உயிரைத் தீக்கிரையாக்கி உணர்த்திச் சென்றுள்ளான் அனைவருக்கும். ஒரே மாதத்தில் இரு அகதிகளை இழந்துள்ளோம். இது இதோடு முடியப்போவதும் இல்லை என்ற பயம் எங்கள் அனைவரையும் ஆட்கொண்டுள்ளது. என்றார்.

Tags: australianewsBattinaathamnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

மே18 நினைவு நாளை வெற்றி நாளாக பிரகடனப்படுத்தும் நாமல்
செய்திகள்

மே18 நினைவு நாளை வெற்றி நாளாக பிரகடனப்படுத்தும் நாமல்

May 18, 2025
நான் உயிருடன் இல்லாவிட்டாலும் ஒற்றை சிங்கக் கொடியின் நிழலின் கீழ் இறையாண்மை கொண்ட நாடாக இலங்கை இருக்க வேண்டும்; மஹிந்த ராஜபக்ஸ
செய்திகள்

நான் உயிருடன் இல்லாவிட்டாலும் ஒற்றை சிங்கக் கொடியின் நிழலின் கீழ் இறையாண்மை கொண்ட நாடாக இலங்கை இருக்க வேண்டும்; மஹிந்த ராஜபக்ஸ

May 18, 2025
புவி கண்காணிப்புக்காக இஸ்ரோ ஏவிய இஓஎஸ்-09 செயற்கைக்கோள் தோல்வி
உலக செய்திகள்

புவி கண்காணிப்புக்காக இஸ்ரோ ஏவிய இஓஎஸ்-09 செயற்கைக்கோள் தோல்வி

May 18, 2025
காஸா போரில் இஸ்ரேல் இராணுவத்துக்கு ஏஐ மூலம் உதவியதாக மைக்ரோசொப்ட் நிறுவனம் ஒப்புக்கொண்டது
உலக செய்திகள்

காஸா போரில் இஸ்ரேல் இராணுவத்துக்கு ஏஐ மூலம் உதவியதாக மைக்ரோசொப்ட் நிறுவனம் ஒப்புக்கொண்டது

May 18, 2025
பல்லாயிரக்கணக்கான மக்களின் உணர்வெழுச்சியுடன் கண்ணீரில் நனைந்த முள்ளிவாய்க்கால் முற்றம்
செய்திகள்

பல்லாயிரக்கணக்கான மக்களின் உணர்வெழுச்சியுடன் கண்ணீரில் நனைந்த முள்ளிவாய்க்கால் முற்றம்

May 18, 2025
நாட்டை சூழவுள்ள கடற்பிராந்தியங்களில் கடல் கொந்தளிப்பாக காணப்படும் என எச்சரிக்கை!
செய்திகள்

நாட்டை சூழவுள்ள கடற்பிராந்தியங்களில் கடல் கொந்தளிப்பாக காணப்படும் என எச்சரிக்கை!

May 18, 2025
Next Post
இலங்கைக் கடற்படையினரால் காப்பாற்றப்பட்ட இந்திய மீனவர்கள்!

இலங்கைக் கடற்படையினரால் காப்பாற்றப்பட்ட இந்திய மீனவர்கள்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.