Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சாத்தியம்!

மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சாத்தியம்!

2 years ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

சப்ரகமுவ, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அத்துடன் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரேலியா மாவட்டங்களிலும் அடிக்கடி மழை பெய்யக்கூடும் என சிரேஸ்ட வானிலை அதிகாரி கலாநிதி மொஹமட் சாலிஹீன் கூறினார்.

இன்றைய வானிலை குறித்து அவர் மேலும் கூறுகையில்,

சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களின் சில இடங்களிலும் அத்துடன் காலி, மாத்தறை, நுவரெலியா மற்றும் புத்தளம் மாவட்டங்களின் சில இடங்களிலும் 50 மில்லிமீற்றர் வரையிலான ஓரளவு பலத்த மழை பெய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களின் சில இடங்களில் மாலை அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய வாய்ப்புக் காணப்படுகிறது.

மத்திய மலைப் பிராந்தியத்தின் மேற்கு சரிவுகளிலும்,வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அத்துடன் ஹம்பாந்தோட்டை மற்றும் திருகோணமலை மாவட்டங்களிலும் மணித்தியாலத்திற்கு 40 – 50 கிலோமீற்றர் வேகத்தில் அடிக்கடி பலத்த காற்று வீசக் கூடும்.

வடக்கு, கிழக்கு, வடமத்திய மற்றும் மத்திய மாகாணங்களில் வானம் முகில் செறிந்து காணப்படும்.

பலத்த காற்றும் மின்னல் தாக்கங்களும் ஏற்படக்கூடிய சந்தர்ப்பங்களில் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

சூரியனின் தெற்கு நோக்கிய நகர்வின் காரணமாக இன்று மதியம் சுமார் 12.11 மணியளவில் ஒட்டிசுட்டான், மாங்குளம்,தெரன்கந்தல் மற்றும் மல்லாவி போன்ற இடங்களுக்கு மேலாக சூரியன் உச்சம் கொடுக்கின்றது.

வங்காள விரிகுடாவின் வட பகுதிக்கு மேலாக இன்றையதினம் தாழ் அமுக்கப் பிரதேசம் ஒன்று உருவாகின்றது. இதன் காரணமாக இக் கடல் பிராந்தியத்தில் மணித்தியாலத்திற்கு 70 – 80 கிலோமீற்றர் வேகத்தில் மிகப் பலத்த காற்று வீசுவதுடன் பலத்த மழையும் பெய்யக்கூடும்.

இதேவேளை இக் கடல் பிராந்தியங்கள் மிகவும் கொந்தளிப்பாகவும் காணப்படும்.ஆகையினால் இக் கடல் பிராந்தியங்களுக்கு செல்லும் மீனவர்களும் கடல்சார் ஊழியர்களும் மிகவும் அவதானத்துடன் செயற்படுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

முல்லைத்தீவு தொடக்கம் காங்கேசன்துறை ,புத்தளம், கொழும்பு காலி ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கரையோரத்திற்கு அப்பால் உள்ள கடல் பிராந்தியங்களில் அடிக்கடி மழை பெய்யக்கூடும்.

கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 30 – 40 கிலோமீற்றர் வேகத்தில் தென்மேற்குத் திசையில் இருந்து காற்று வீசும்.

காங்கேசன்துறை தொடக்கம் மன்னார், புத்தளம் ஊடாக சிலாபம் வரையான அத்துடன் ஹம்பாந்தோட்டை தொடக்கம் பொத்துவில் வரையான கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 55 – 60 கிலோமீற்றரிலும் கூடிய வேகத்தில் அடிக்கடி காற்று அதிகரித்து வீசக்கூடும்.இவ்வாறான சந்தர்ப்பங்களில் இக் கடல் பிராந்தியங்கள் கொந்தளிப்பாகக் காணப்படும்.

சிலாபம் தொடக்கம் கொழும்பு, காலி ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான அத்துடன் திருகோணமலை தொடக்கம் காங்கேசன்துறை வரையான கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 50 கிலோமீற்றரிலும் கூடிய வேகத்தில் இடைக்கிடையே காற்று அதிகரித்து வீசக் கூடும்.இவ்வாறான சந்தர்ப்பங்களில் இக் கடல் பிராந்தியங்கள். ஓரளவு கொந்தளிப்பாகக் காணப்படும் என்றார்.

Tags: BattinaathamnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

42 ஆயிரம் ஹெக்டேர் காடுகள் சாம்பல்; பிரான்ஸில் பெரும் காட்டுத்தீயால் பரபரப்பு!
செய்திகள்

42 ஆயிரம் ஹெக்டேர் காடுகள் சாம்பல்; பிரான்ஸில் பெரும் காட்டுத்தீயால் பரபரப்பு!

July 29, 2026
இலங்கை அரச மருத்துவமனையொன்று அறவிடும் பரிசோதனை விலை விபர பட்டியல்
செய்திகள்

இலங்கை அரச மருத்துவமனையொன்று அறவிடும் பரிசோதனை விலை விபர பட்டியல்

July 29, 2026
கிண்ணியாவில் 43 பேருக்கு காணி உரிமங்கள்; புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.80 இலட்சம் நிவாரணம்!
செய்திகள்

கிண்ணியாவில் 43 பேருக்கு காணி உரிமங்கள்; புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.80 இலட்சம் நிவாரணம்!

July 29, 2026
இந்திய மீனவர்களின் அத்துமீறலுக்கு எதிர்ப்பு; கறுப்புக்கொடி ஏந்தி கடலில் போராட்டம்!
செய்திகள்

இந்திய மீனவர்களின் அத்துமீறலுக்கு எதிர்ப்பு; கறுப்புக்கொடி ஏந்தி கடலில் போராட்டம்!

July 29, 2026
மட்டக்களப்பில் 71 குடும்பங்களுக்கு வீடமைப்பு புனரமைப்பு நிதி உதவி
காணொளிகள்

மட்டக்களப்பில் 71 குடும்பங்களுக்கு வீடமைப்பு புனரமைப்பு நிதி உதவி

July 29, 2026
அகில இலங்கை YMMA பேரவையின் 57ஆவது தேசிய தலைவருக்கு கௌரவ விழா!
செய்திகள்

அகில இலங்கை YMMA பேரவையின் 57ஆவது தேசிய தலைவருக்கு கௌரவ விழா!

July 29, 2026
Next Post
அனுரவின் தேர்தல் பிரச்சார அலுவலகத்துக்கு தீ வைப்பு!

அனுரவின் தேர்தல் பிரச்சார அலுவலகத்துக்கு தீ வைப்பு!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.