Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மனித புதைகுழிகள் தொடர்பான பதிவுகளை மறைத்த கோட்டா; வெடித்தது புதிய சர்ச்சை!

மனித புதைகுழிகள் தொடர்பான பதிவுகளை மறைத்த கோட்டா; வெடித்தது புதிய சர்ச்சை!

2 years ago
in முக்கிய செய்திகள்

மனித புதைகுழிகள் தொடர்பான விசாரணைகளை தடுக்கும் வகையில் பொலிஸ் பதிவுகளை சிதைத்துள்ளார் என இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

மனித புதைகுழிகளை தோண்டியெடுப்பதில் கோட்டாபய ராஜபக்சவின் பங்கு அரசியல் தலையீட்டிற்கு ஒரு எடுத்துக்காட்டு என சர்வதேச உண்மை மற்றும் நீதித் திட்டம் மற்றும் காணாமல் போனவர்களின் குடும்பங்களுக்கான ஊடகவியலாளர்கள் அமைப்புகள் கூறியுள்ளன.

கோட்டாபய ராஜபக்ச இராணுவ அதிகாரியாக இருந்த போது, 1989 ஆம் ஆண்டுகளில் மார்க்சி கிளர்ச்சி உச்சக் கட்டத்தில் இருந்துடன், அந்தக் காலப் பகுதிக்குரியது என கூறப்படும் மனித புதைகுழிகள் கண்டறியப்பட்டதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து கடந்த 2013 ஆம் ஆண்டு இலங்கையின் மத்திய மாகாணமான மாத்தளை மாவட்டத்தில் மனித புதைகுழிகள் கண்டுபிடிக்கப்பட்ட பின்னர், அந்தப் பகுதியில் உள்ள பொலிஸ் நிலையங்களில் உள்ள ஐந்து ஆண்டுகளுக்கும் மேலான அனைத்து பொலிஸ் பதிவுகளையும் அழிக்குமாறு அப்போதைய பலம்வாய்ந்த பாதுகாப்பு அதிகாரியாக இருந்த கோட்டாபய ராஜபக்சே உத்தரவிட்டதாகவும் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

கடந்த மூன்று தசாப்தங்களில் சுமார் 20 பாரிய புதைகுழிகளை தோண்டியதில் நூற்றுக்கணக்கான எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்ட போதிலும், அது குறித்து எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்டவர்களை அடையாளம் கண்டு, அவர்களது உடல்களை குடும்பத்தினரிடம் ஒப்படைக்க வேண்டும் எனவும் பல்லாயிரக்கணக்கான எச்சங்கள் இன்னும் கண்டுபிடிக்கப்படாத மனிதப் புதைகுழிகளில் புதைக்கப்பட்டிருக்கலாம் என்றும் அந்த அமைப்புக்கள் அச்சம் வெளியிட்டுள்ளன.

விசாரணைக்கு இடையூறு விளைவித்ததாகக் கூறப்படும் கோட்டாபய ராஜபக்ச மற்றும் மூத்த பொலிஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்குமாறு அந்த அறிக்கையில் கோரப்பட்டுள்ளது.

இதற்கு அடுத்து வந்த அரசாங்கங்களால் நிறுவப்பட்ட பல விசாரணை ஆணைக்குழுக்கள், பாரிய புதைகுழிகள் பற்றி ஆராய கட்டளையிடவில்லை என்பதுடன் உண்மையை வெளிக்கொண்டுவரும் முயற்சிகளையும் கையாளவில்லை.

மனித புதைகுழிகள் கண்டுபிடிக்கப்பட்டு விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டபோது, நீதிபதிகள் மற்றும் தடயவியல் நிபுணர்கள் திடீரென இடமாற்றம் செய்யப்பட்டதுடன், குடும்பங்களின் சட்டத்தரணிகளுக்கு இடங்களிக்கப்படவில்லை எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

உயிருள்ள சாட்சிகளைக் கண்டுபிடிக்க எந்த முயற்சியும் எடுக்கப்படவில்லை என்பதுடன், பிரேதப் பரிசோதனை தரவுகள் சேகரிக்கப்படவில்லை எனவும் விமர்சனம் முன்வைக்கப்பட்டுள்ளது.

இதேவேளை மனித புதைகுழி தொடர்பான தரவுகளை அழித்தமை தொடர்பாக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு குறித்து உரிய விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும் என பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர்களும் வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புடையசெய்திகள்

மட்டு நகரில் தேசிய வெசாக் வாரத்தினை முன்னிட்டு பல்வேறு நிகழ்வுகள்
செய்திகள்

மட்டு நகரில் தேசிய வெசாக் வாரத்தினை முன்னிட்டு பல்வேறு நிகழ்வுகள்

May 12, 2025
87 மில்லியன் ரூபா பெறுமதியான கேரள கஞ்சா பறிமுதல்
செய்திகள்

87 மில்லியன் ரூபா பெறுமதியான கேரள கஞ்சா பறிமுதல்

May 12, 2025
இந்தோனேசியாவில் மூழ்கிய கப்பல்; பலர் உயிரிழப்பு
உலக செய்திகள்

இந்தோனேசியாவில் மூழ்கிய கப்பல்; பலர் உயிரிழப்பு

May 12, 2025
ஏற்றுமதி வருமானம் அதிகரிப்பு
செய்திகள்

ஏற்றுமதி வருமானம் அதிகரிப்பு

May 12, 2025
தமிழ் இன அழிப்பு வாரம் இன்று மட்டு சத்துருக்கொண்டான் நினைவுத்தூபி அருகில் ஆரம்பம்
காணொளிகள்

தமிழ் இன அழிப்பு வாரம் இன்று மட்டு சத்துருக்கொண்டான் நினைவுத்தூபி அருகில் ஆரம்பம்

May 12, 2025
மட்டு சிறையிலிருந்து 15 கைதிகள் பொது மன்னிப்பில் விடுதலை
காணொளிகள்

மட்டு சிறையிலிருந்து 15 கைதிகள் பொது மன்னிப்பில் விடுதலை

May 12, 2025
Next Post
பிரபாகரனின் பிரேத பரிசோதனையை வெளியிடுவதற்கும், தேசிய பாதுகாப்பிற்கும் என்ன சம்மந்தம்? ; சிவாஜிலிங்கம் கேள்வி!

பிரபாகரனின் பிரேத பரிசோதனையை வெளியிடுவதற்கும், தேசிய பாதுகாப்பிற்கும் என்ன சம்மந்தம்? ; சிவாஜிலிங்கம் கேள்வி!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.