26 முறை பிடியாணைகள் பிறப்பிக்கப்பட்ட பெண் பதுளை, விசேட குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
போலியான ஆவணங்களை தயாரித்து பண மோசடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் நீதிமன்றத்தை புறக்கணித்து வந்த இரண்டு பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
2013ஆம் ஆண்டு ஊவா மாகாண சபையின் சுகாதார அமைச்சின் செயலாளரின் கையொப்பத்தைப் பயன்படுத்தி அரசாங்க வேலை வழங்குவதாகக் கூறி போலி நியமனக் கடிதங்களை வழங்கி பண மோசடி செய்யப்பட்டுள்ளதாக சந்கேநபர் ஒருவர் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
சந்தேகநபருக்கு எதிரான 26 முறைப்பாடுகள் தொடர்பில் பதுளை விசேட குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டு சந்தேக நபரைக் கைது செய்து நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
இதன்படி, பொய்யான ஆவணங்களை தயாரித்தமைக்காக சந்தேகநபர் நீதிமன்றத்தால் குற்றவாளியாக அடையாளங்காணப்பட்ட நிலையில், சந்தேகநபர் நீதிமன்றத்தை புறக்கணித்து வந்ததால் நீதிமன்றத்தினால் 26 பிடியாணைகளும் பிறப்பிக்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
பதுளை, விசேட குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் சந்தேகநபர் நேற்று (28) ஆராச்சிக்கட்டுவ, நல்லதரம்கட்டுவ பிரதேசத்தில் வைத்து கைதுசெய்யப்பட்டதுடன், சந்தேகநபருக்கு பிணை வழங்கிய பெண்ணும் சிலாபம் நகரில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட பெண்கள் 52 மற்றும் 30 வயதுடைய அம்பாறை கொனகொல்ல பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கபப்டும் நிலையில், பதுளை, விசேட குற்றப் புலனாய்வுப் பிரிவினர் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.