Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
ஜனாதிபதி தேர்தலில் ஆதரவு யாருக்கு?; நிலைப்பாட்டை அறிவித்தது வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கம்!

ஜனாதிபதி தேர்தலில் ஆதரவு யாருக்கு?; நிலைப்பாட்டை அறிவித்தது வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கம்!

2 years ago
in செய்திகள், மட்டு செய்திகள்

வடக்கிலும் கிழக்கிலும் குரல் கொடுப்பது போல சர்வதேச நாடுகளிலும் எங்களுக்காக குரல் கொடுக்க வேண்டும் எனவும் கோருகின்றோம். மட்டக்களப்பு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட மட்டக்களப்பு மாவட்ட சங்கத்தின் தலைவி அ.அமலநாயகி தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட சங்கத்தின் ஊடக சந்திப்பு நேற்று(28) மட்டு.ஊடக அமையத்தில் நடைபெற்றது.

குறித்த சங்கத்தின் தலைவி அமலராச் அமலநாயகி கலந்து கொண்டு ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்திருந்தார்.

எதிர்வரும் 30 திகதி சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினம், அதனை முன்னிட்டு திருகோணமலையில் சிவனாலயத்திற் முன்பாக இருந்து பேரணி ஒன்றை ஆரம்பிக்கவுள்ளோம். அதே வேளை வட மாகாணத்திலும் ஒரு பேரணியை மேற்கொள்ளவுள்ளோம்.

சர்வதேச நீதி பொறிமுறையை நாடியே நாங்கள் நீதி கேட்கும் பேரணி ஒன்றினை நடாத்தவுள்ளோம், இந்நிகழ்வில் அனைத்து தரப்பினரையும் அழைப்பு விடுக்கின்றோம்.

இதற்கான நீதி வேண்டி நாம் தொடர்ச்சியாக பேராடி வருகின்றோம் பொறுப்பு கூறும் தன்மை இலங்கை அரசாங்கத்திற்கு இல்லை என்பதால் சர்வதேசத்தை நாம் நாடி நிற்கின்றோம்.

முறையிட்ட எம்மைத் தான் தேடி தேடி விசாரனை செய்கின்றார்கள் அதனால்தான் ஐக்கிய நாடுகள் சபையை நாம் நாடி நிற்கின்றோம்.

ஜெனிவா கூட்டத் தொடர் எதிர்வரும் மாதம் இடம்பெறவுள்ளது அதிலாவது எமது வலிகளுக்கு குரல் கொடுக்க வேண்டும்.

மரணம் என்பது எல்லோருக்கும் வரும் அது கண் முன்னே நடந்தால் பறவாயில்லை ஆனால் எமது உறவுகளுக்கு என்ன நடந்தது என வெளிக்கொணர வேண்டும்.

வடக்கிலும் கிழக்கிலும் குரல் கொடுப்பது போல சர்வதேச நாடுகளும் எங்களுக்காக குரல் கொடுக்க வேண்டும் எனவும் கோருகின்றோம்.

அதேசமயம் ஊடகவியலாளர் ஒருவர் காணாமல் ஆக்கப்பட்ட சங்க தலைவிதியிடம் ” தமிழர் ஒருவர் பொது வேட்பாளராக களமிறங்கியுள்ளார் அவருக்கு உங்களது ஆதரவு எப்படி இருக்கும்?” என்று கேள்வி எழுப்பிய வேளை அதற்கு பதிலளித்த குறித்த சங்கத்தின் தலைவி ”இதுவரை ஜனாதிபதி தேர்தலில் தமிழர் ஒருவர் வேட்பாளராக போட்டியிடாமலேயே இருந்தார். ஆனால் இன்று அது மாறி விட்டது, எனினும் எமது ஆதரவு யாருக்கு என்று பொதுவாக எம்மால் வெளியிட முடியாது” யார் ஜனாதிபதியானாலும் எமது கோரிக்கைகளுக்கு தீர்வு தர வேண்டும் என்பதே எமது நிலைப்பாடாகும் என்று மேலும் குறிப்பிட்டார்.

Tags: BattinaathamnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

புலிகளின் ஆயுதங்கள் பாதாள உலகக் குழுக்களிடம் உள்ளதா? பொலிஸார் விசாரணை
செய்திகள்

புலிகளின் ஆயுதங்கள் பாதாள உலகக் குழுக்களிடம் உள்ளதா? பொலிஸார் விசாரணை

September 13, 2026
ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு இறக்குமதியாகும் கார்களின் ஸ்மார்ட் சாவிகளை திருடிவந்தவர்கள் கைது
செய்திகள்

ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு இறக்குமதியாகும் கார்களின் ஸ்மார்ட் சாவிகளை திருடிவந்தவர்கள் கைது

September 13, 2026
எரிபொருள் விலைகளை அதிகரிக்க விநியோகஸ்தர்கள் சங்கம் கோரிக்கை
செய்திகள்

எரிபொருள் விலைகளை அதிகரிக்க விநியோகஸ்தர்கள் சங்கம் கோரிக்கை

September 13, 2026
தெஹிவளை கைக்குண்டுத் தாக்குதல்; இரு குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் குறித்து ஐ.நா கவலை!
செய்திகள்

தெஹிவளை கைக்குண்டுத் தாக்குதல்; இரு குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் குறித்து ஐ.நா கவலை!

September 12, 2026
பிரதமர் தலைமையில் மட்டக்களப்பில் 55 மாற்றுத்திறனாளி பல்கலைக்கழக மாணவர்கள் கௌரவிப்பு!
மட்டு செய்திகள்

பிரதமர் தலைமையில் மட்டக்களப்பில் 55 மாற்றுத்திறனாளி பல்கலைக்கழக மாணவர்கள் கௌரவிப்பு!

September 12, 2026
ரோஹிங்கியா முஸ்லிம்கள் அகதிகள் அல்ல அவர்கள் தீவிரவாதிகள் !
செய்திகள்

ரோஹிங்கியா முஸ்லிம்கள் அகதிகள் அல்ல அவர்கள் தீவிரவாதிகள் !

September 12, 2026
Next Post
காத்தான்குடியில் நான்கு உணவகங்களுக்கு சீல் வைத்த சுகாதார வைத்திய அதிகாரிகள்!

காத்தான்குடியில் நான்கு உணவகங்களுக்கு சீல் வைத்த சுகாதார வைத்திய அதிகாரிகள்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு