தனது சகோதரன், உறவினர் அல்லது பணியாளர் அதிகாரி என கூறிக்கொண்டு வெளிநாட்டு வேலைக்காக பணம் வசூலிக்கும் எவருக்கும் பணம் வழங்கக்கூடாது என தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார வலியுறுத்தியுள்ளார்.
அத்தகைய பண பரிவர்த்தனைக்கு தான் பொறுப்பல்ல என அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
அவ்வாறான எந்தவொரு கொடுக்கல் வாங்கலிலும் தமக்கு தொடர்பில்லை என அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
வெளிநாட்டு வேலை வாய்ப்பு முகவர் நிலையங்களை நடத்தும் தொழிலில் தனது குடும்பத்தைச் சேர்ந்த எவரும் அல்லது அமைச்சின் ஊழியர்களில் எந்த அதிகாரியும் ஈடுபடவில்லை என அமைச்சர் கூறியுள்ளார்.
வெளிநாட்டு வேலைகளுக்கு அனுப்புவதாகக் கூறி, நாட்டின் பல்வேறு பகுதிகளில் சட்டவிரோதமாக பணம் சேகரிக்கும் கும்பல்கள் இயங்கி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இவ்வாறான நடவடிக்கைகளை தடுக்க கடுமையான சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள அமைச்சர் தீவிரமாக தலையிட்டு வருகின்றதுடன், மோசடியாளர்களிடம் அமைச்சரின் ஆதரவு இல்லை எனவும் வலியுறுத்தப்படுகிறது.
வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகத்தில் பதிவு செய்யப்பட்ட வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிலையங்களுக்கு மாத்திரமே தொழிலாளர்களை வெளிநாட்டு வேலைகளுக்கு அனுப்ப முடியும் எனவும், அந்த நிறுவனங்களை மாத்திரம் தொடர்பு கொள்ளுமாறு பொதுமக்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.