தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளருக்கு ஆதரவு தெரிவித்து நேற்று (29) இரவு ஓட்டமாவடியில் தேர்தல் பிரச்சாரக் கூட்டம் நடைபெற்றது. இதனை தேசிய மக்கள் சக்தியின் கல்குடா தொகுதி கிளையினர் ஏற்பாடு செய்திருந்தனர்.
முன்னாள் வர்த்தக சங்கத் தலைவர் நியாஸ் ஹாஜியார் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்டபாளர் அநுரகமார திசநாயக்கா கலந்து கொண்டு உரையாற்றினார்.
மட்டக்களப்பு தேசிய மக்கள் சக்தியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் வைத்தியர் எம்.பி.எம்.அஜிவத்,உட்பட அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்ட தேசிய மக்கள் சக்தியன் பிரதிநிதிகள் கலந்து கொண்டு உரையாற்றினார்கள்.
இக் கூட்டத்தில் அனுர பேசியதன் சுருக்கம்,
இனவாதம் இல்லை. இனவாத்தை தூண்டுவது அரசியல்வாதிகளே. இனவாத்தை தோற்கடிக்கும் அரசியலே தேவை.
கோட்டா காலத்தில் திட்டமிட்டு இனவாத்தை உருவாக்கினார்கள்.
மொட்டும் இனவாதம் ஊடாகத்தான் வந்தது.
2009 இனவாத்தை உருவாக்கிய மொட்டு கட்சியின் பலர் தற்போது சஜித்துடனும், ரணிலுடன்.
இங்கு சஜீத் வந்தாரா இன்னும் வரல.
கிழக்குக்கு சஜீத் ஹக்கிமுடன், தெற்கு சம்பிக்கவுடன் எப்படி கேம்.
2014 காலப்பகுதியில் சிங்கள இனவாத்தை உருவாக்கினார்கள்.
எல்லா மக்களின் பாதுகாப்பு உரிமையையும் உருவாக்குவோம்.
நாடு வீழ்ச்சியடைதுள்ளது நாங்கள் நாட்டைக்கட்டியெழுப்புவோம்.
களவெடுக்காத அரசாங்கமா வேண்டும்.
ரணில் மத்திய வங்கி கள்ளன்.
இம்முறை மக்கள் வாக்களித்தால் டவுள் மடங்கில் களவு எடுப்பார்கள்.
களவெடுப்பவர்களுக்கு நீங்கள் வாக்களித்தால் கராம்.
தொற்கில் கழுவிக்கொண்டு வந்திருக்கு எங்கள் கட்சி. வெற்றி நிச்சயம்.
சிங்கள மக்கள் மாத்திரம் ஆட்சியை கட்டியெழுப்புவது தேவையில்லை. அனைத்து மக்களும் தேவை.
களவை நிற்பாட்டுவோம். களவெடுப்பவருக்கு தண்டனை வழங்கப்படும். சொத்துக்கள் பரிமுதல் செய்யப்படும்.
80 களில் இந்தியா ராணுவம் வந்தது.
இந்தியா சந்திர மண்டலம் செல்லுகின்றார்கள், பல உற்பத்திகளை செய்கின்றார்கள். ஆனால் நாங்கள் வாழைச்சேனை எம்பிலிபிட்டிய கடதாசி ஆலையை மூடிவிட்டோம்.
பல பொருட்களை இறக்குமதி செய்து கொமிசன் பெறுகின்றோம் முட்டை உள்ளிட்ட பல பொருட்களில்.
இவ்வாறான நிலையில் டொலர்இல்லாமல் போனது.
நாங்கள் இல்லாத விடயத்தை உற்பத்தி செய்யவேண்டும்.
டெலிகோம் விமான நிலையம் உள்ளிட்டவற்றை விற்க போறார்கள். இதுவா ரணிலின் பொருளாதாரம்.
வியாபாரத்தை செய்யுங்கள் நாங்கள் உதவி செய்கின்றோம். நல்ல வரியைத்தாங்கள்.
வரியில் செலவுசெய்த தகவல் போனுக்குவரும்.
ஹக்கிம், அமீர் அலி பிள்ளைகள் அனைவரும் ஒன்றாகத்தானே இருக்கின்றார்கள்.
சஜீத்துக்கு நெற்றியில் ஜனாதிபதி என எழுதியிருக்கா. குடும்ப அரசியலை மாற்றவேண்டும்.
இம்முறை குடும்ம அரசியலை மாற்றுவோம்.
ஒற்றுமை நாடு. தமிழ் மொழியில் பொலிஸ் முறைப்பாடு செய்யலாம்.
உங்களின் மதம் கலாசாரம் அனைத்தையும் பின்னப்பற்ற பற்ற முடியும்.
ரவூப் கக்கீம் சொன்னார், நான் சொன்னதாக முஸ்லிம் தாயின் வயிற்றில் அடிப்படை வாதிகள் உருவாகின்றார்கள் என.
இனவாத சுலோகங்கள் மேடைகளில் பேசப்படமாட்டது.
21ம் திகதி சந்தேகம் கொள்ளத்தேவையில்லை எங்களுக்கு உதவி செய்யுங்கள்.
ரணில் அங்க இல்லை. இங்கதான் சுத்துரார். சஜித் குப்ப மெசின். என்று பலவற்றை கூறினார்.