காணாமல் போன நீர்மூழ்கிக் கப்பலான டைட்டனின் உடையது என நம்பப்படும் பாகங்கள் கண்டுப்பிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க கடலோர காவல்படை தெரிவித்துள்ளது.
தீவிரமான தேடுதல் நடவடிக்கையின் போது, கடலுக்கடியில் டைட்டானிக் கப்பலின் இடிபாடுகளுக்கு அருகில் குறித்த பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
டைட்டன் நீர்மூழ்கிக் கப்பலில் உள்ள ஆக்சிஜன் தீர்ந்துவிடுவதற்குள் கப்பலைக் கண்டுபிடிக்க மீட்புக் குழுக்கள் விரைந்து செயற்பட்டு வருகின்றது.
அதே சமயத்தில், தேடும் பணி இப்போது முக்கியமான கட்டத்தை எட்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடலுக்கு அடியில் மூழ்கிக் கிடக்கும் டைட்டானிக் கப்பலின் உடைந்த பாகங்களை சுற்றிப் பார்க்கச் சென்ற டைட்டன் நீர்மூழ்கிக் கப்பல் மாயமானது.
காணாமல் போன டைட்டன் நீர்மூழ்கி கப்பல் கடலின் அழுத்தம் தாங்காமல் உள்நோக்கி வெடித்திருக்கலாம் என நம்பப்படுகிறது.
இந்த விபத்தில், குறித்த நீர்மூழ்கி கப்பலில் பயணித்த ஐந்து பேரும் இறந்துவிட்டதாக கூறப்படுகிறது.
இந்தநிலையில், நீர்மூழ்கிக் கப்பலைத் தேடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.