புகையிரத திணைக்களம் இலாபமடைய வேண்டுமாயின் புகையிரத சேவையை அதிகார சபையாக மாற்றியமைக்க வேண்டும், புகையிரத சேவை மறுசீரமைக்கப்பட வேண்டும் என போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன குறிப்பிட்ட கருத்துக்கு புகையிரத சேவை தொழிற்சங்கத்தினர் கடும் எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.
புகையிரத சேவையை அதிகார சபையாக மாற்றியமைக்கும் போது பொது பயணிகள் பாரிய அசௌகரியங்களை எதிர்கொள்வார்கள். இலாபமடையும் நோக்கத்துக்காக கட்டணம் சடுதியாக அதிகரிக்கப்படும்.
ஆகவே புகையிரத சேவையை அதிகார சபையாக மாற்றியமைக்கும் போது ஏற்படும் பாதிப்பை அரசாங்கம் மக்களுக்கு அறிவுறுத்த வேண்டும். மக்களின் விருப்பத்துக்கு அமையவே புகையிரத சேவை மறுசீரமைக்கப்பட வேண்டும் என புகையிரத சேவை மறுசீரமைக்கப்பட வேண்டும் என்றார்.
புகையிரத சேவையில் பல மாற்றங்கள் ஏற்படுத்த வேண்டியுள்ளது. மானியம் இல்லாத காரணத்தால் அபிவிருத்தி பணிகளை முன்னெடுக்க முடியாதுள்ளது. ஆகவே புகையிரத சேவை அதிகார சபையாக மாற்றியமைக்கப்பட வேண்டும்.
அத்துடன், புகையிரத சேவை காலத்துக்கு ஏற்றாற் போல் மறுசீரமைக்கப்பட வேண்டும் என போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன குறிப்பிட்ட கருத்துக்கு புகையிரத சேவை தொழிற்சங்கத்தினர் கடும் எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.
புகையிரத சேவையை அதிகார சபையாக மாற்றியமைத்தால் நடுத்தர மக்கள் பாரிய நெருக்கடிகளை எதிர்கொள்வார்கள். பொது போக்குவரத்து சேவையின் கட்டணம் உயர்வடைந்ததால் பெரும்பாலான பொது பயணிகள் தற்போது புகையிரத சேவையை பயன்படுத்துகிறார்கள். இவ்வாறான பின்னணியில் புகையிரத சேவையை அதிகார சபையாக்கினால் பொது பயணிகள் பாரிய அசௌகரியங்களை எதிர்கொள்வார்கள்.
புகையிரத சேவையை அதிகாரசபையால் மாற்றியமைக்கும் போது பொதுபயணிகள் எதிர்கொள்ளும் அசௌகரியங்கள், இழக்கப்படும் வரபிரசாதங்கள் ஆகியன தொடர்பில் வெளிப்படை தன்மையுடன் அரசாங்கம் மக்களுக்கு அறிவிக்க வேண்டும். மக்களின் விருப்பத்துக்கு அமையவே புகையிரத சேவை மறுசீரமைக்கப்பட வேண்டும் என தொழிற்சங்கத்தினர் போக்குவரத்து அமைச்சிடம் வலியுறுத்தியுள்ளனர்.