Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
இலங்கைக் கடற்பரப்புக்குள் கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்களுக்கு இருபது மில்லியன் ரூபா அபராதம் விதிப்பு!

இலங்கைக் கடற்பரப்புக்குள் கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்களுக்கு இருபது மில்லியன் ரூபா அபராதம் விதிப்பு!

2 years ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

இலங்கைக் கடற்பரப்புக்குள் எல்லை தாண்டி கற்பிட்டி வடக்கு கடற்பரப்பில் மீன்பிடியில் ஈடுபட்ட நிலையில் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்ட 22 இந்திய மீனவர்களில் 12 பேருக்கு தலா இருபது மில்லியன் ரூபா வீதம் அபராத தொகையை செலுத்துமாறும், தவறும் பட்சத்தில் 6 மாதங்கள் சிறைத் தண்டனை அனுபவிக்க நேரிடும் என புத்தளம் மாவட்ட நீதிவான் நீதிமன்றம் நேற்று முன்தினம் (03) உத்தரவிட்டுள்ளது.

இரண்டு படகுகளில் தமிழகம் – தூத்துக்குடியில் இருந்து வந்த 22 மீனவர்களில் 12 மீனவர்களுக்கே இவ்வாறு தண்டப்பணம் செலுத்துமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும், ஏனைய 10 மீனவர்களையும் எதிர்வரும் 10 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறும் புத்தளம் மாவட்ட மேலதிக நீதிவான் டி.எல்.ஏ.என். விமலரத்ன உத்தரவிட்டிருந்தார்.

குறித்த இந்திய மீனவர்கள் 22 பேரும் எல்லை தாண்டி புத்தளம் – கற்பிட்டி வடக்கு கடற்பகுதியில் மீன்பிடியில். ஈடுபட்டுக் கொண்டிருந்த போது கடந்த ஆகஸ்ட் மாதம் 5 ஆம் திகதி இரவு கடற்படையிரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

மேலும், குறித்த இந்திய மீனவர்கள் பயணித்த இரண்டு விசைப் படகுகளும் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

இவ்வாறு கைது செய்யப்பட்ட 22 மீனவர்களும் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக புத்தளம் மாவட்ட கடற்தொழில் நீரியல் வளத்துறை திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்ட பின்னர் அவர்கள் புத்தளம் மாவட்ட நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

சட்டவிரோதமாக இலங்கை எல்லைக்குள் நுழைந்தமை தொடர்பில் இந்த 22 இந்திய மீனவர்களுக்கும் எதிராக வழக்குத் தொடரப்பட்டது.

இதன்போது சந்தேக நபர்களான இந்திய மீனவர்கள் 22 பேரையும் விளக்கமறியலில் வைக்குமாறு புத்தளம் மாவட்ட மேலதிக நீதிவான் உத்தரவிட்டிருந்தார்.

இந்த நிலையில், சந்தேக நபர்கள் மீண்டும் இன்று (03) புத்தளம் மாவட்ட நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.

இதன்போது, சந்தேக நபர்களான 22 இந்திய மீனவர்களில் 12 பேர் தமது குற்றத்தை ஒப்புக்கொண்டதன் காரணமாக, குறித்த 12 மீனவர்களுக்கும் தலா இருபது மில்லியன் ரூபா வீதம் அபராத தொகையை செலுத்துமாறும், அபராத தொகையை செலுத்த தவறும் பட்சத்தில் 6 மாதங்கள் சிறைத் தண்டனை அனுபவிக்க வேண்டும் எனவும் நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் சார்பில் இந்திய உயர்ஸ்தானிகரின் வேண்டுகோளின் பேரில் சட்டத்தரணிகளான பாரிஸ் மரிக்கார் மற்றும் அபுஹர் மொஹமட் அஸ்பர் மன்றில் ஆஜராகியிருந்தனர்.

இதேவேளை, இந்த வருடம் இதுவரை மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளின் மூலம் இலங்கையில் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட 44 இந்திய மீன்பிடி படகுகளை கைப்பற்றியுள்ளதுடன், 322 இந்திய மீனவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதாக கடற்படையினர் தெரிவித்தனர்.

Tags: BattinaathamnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

சாய்ந்தமருதில் போலி உறுதி எழுதும் சட்டவிரோத இடங்கள்!
செய்திகள்

சாய்ந்தமருதில் போலி உறுதி எழுதும் சட்டவிரோத இடங்கள்!

July 28, 2026
கனடாவில் இந்திய வம்சாவளியினர் உட்பட 19 பேர் கைது
உலக செய்திகள்

கனடாவில் இந்திய வம்சாவளியினர் உட்பட 19 பேர் கைது

July 28, 2026
திராய்மடு ஸ்ரீ முருகன் ஆலயத்தின் 7ஆம் நாள் உற்சவம் பக்தி பூர்வமாக நடைபெற்றது!
செய்திகள்

திராய்மடு ஸ்ரீ முருகன் ஆலயத்தின் 7ஆம் நாள் உற்சவம் பக்தி பூர்வமாக நடைபெற்றது!

July 28, 2026
செம்மணி விவகாரத்திற்கு காரணமானவர்களுக்கு தண்டனை உறுதி; ஹர்ஷண நாணயக்கார
செய்திகள்

செம்மணி விவகாரத்திற்கு காரணமானவர்களுக்கு தண்டனை உறுதி; ஹர்ஷண நாணயக்கார

July 28, 2026
நீதிபதிகளின் ஓய்வூதிய வயது நீட்டிப்பு; சர்வஜன வாக்கெடுப்பு அவசியமில்லை – நளிந்த ஜெயதிஸ்ஸ
செய்திகள்

நீதிபதிகளின் ஓய்வூதிய வயது நீட்டிப்பு; சர்வஜன வாக்கெடுப்பு அவசியமில்லை – நளிந்த ஜெயதிஸ்ஸ

July 28, 2026
தெவிநுவரயில் போதைப்பொருள் வைத்திருந்த பல காவடி நடனக் கலைஞர்கள் கைது!
செய்திகள்

தெவிநுவரயில் போதைப்பொருள் வைத்திருந்த பல காவடி நடனக் கலைஞர்கள் கைது!

July 28, 2026
Next Post
தமிழ் மக்களை பழிவாங்க முற்படும் ரணில்; சுமந்திரன் குற்றச்சாட்டு!

தமிழ் மக்களை பழிவாங்க முற்படும் ரணில்; சுமந்திரன் குற்றச்சாட்டு!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.