Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
தமிழ் மக்களை பழிவாங்க முற்படும் ரணில்; சுமந்திரன் குற்றச்சாட்டு!

தமிழ் மக்களை பழிவாங்க முற்படும் ரணில்; சுமந்திரன் குற்றச்சாட்டு!

2 years ago
in அரசியல், செய்திகள்

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தமிழ் மக்களைப் பழிவாங்க முற்படுவதாக இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் குற்றஞ்சாட்டியுள்ளார்.

நாடாளுமன்றில் நேற்றுமுன்தினம் (03) உரையாற்றும் போதே சுமந்திரன் இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

அதாவது நீண்டகாலமாக நடத்தப்படாதுள்ள மாகாண சபைத் தேர்தலைப் பழைய முறையில் நடத்துவதற்கான சட்டச் சிக்கலைத் தீர்க்கும் வகையிலான தனி நபர் பிரேரணை ஒன்று எம்.ஏ.சுமந்திரனால் நீண்ட காலத்துக்கு முன்னர் சமர்ப்பிக்கப்பட்டிருந்தது.

இதற்கான சட்டத் தடைகள் நீக்கப்பட்டு இரண்டாம் வாசிப்பும் வாக்கெடுப்போ விவாதமோ இன்றி நிறைவேற்றப்பட்டிருந்த நிலையில், இன்று அதனை நாடாளுமன்றில் மூன்றாம் வாசிப்புக்காக எடுத்துக் கொண்டு நிறைவேற்ற உத்தேசிக்கப்பட்டிருந்தது. எனினும் இன்று அது நாடாளுமன்ற நிகழ்ச்சி நிரலில் உள்ளடக்கப்பட்டிருக்கவில்லை.

இந்தநிலையில் நாடாளுமன்றில் உரையாற்றிய எம்.ஏ.சுமந்திரன் இந்த பிரேரணையை நாடாளுமன்றில் நிறைவேற்றுவதற்கு ஜனாதிபதி முன்னதாக தம்முடன் இணங்கி இருந்த போதும் இலங்கைத் தமிழரசுக் கட்சி சஜித் பிரேமதாசவை ஆதரிக்கத் தீர்மானித்து அறிவித்ததை அடுத்து, ஜனாதிபதி பழிவாங்கும் வகையில் செயற்படுவதாகக் குற்றம் சுமத்தினார்.

இதேவேளை நாளையும் நாடாளுமன்ற அமர்வு இருக்கின்ற நிலையில், தமது பிரேரணையை நாளைய நிகழ்ச்சி நிரலிலேனும் உள்ளடக்காவிட்டால் ஜனாதிபதி தமிழ் மக்கள் முன்பாகவும் நாட்டு மக்கள் முன்பாகவும் இனவாதியாக காட்டப்படுவார் என எச்சரித்தார்.

நான் செய்யவிருந்த ஒரு விடயத்திற்கு அனுமதி கொடுப்பதாக சொல்லி விட்டு கடைசி நேரத்தில் இவ்வாறு தடுப்பதன் மூலமாக எங்கள் மக்கள் மீது வெறுப்பைக் காட்டும் நிகழ்ச்சியாக தான் நாம் இதைப் பார்க்கின்றோம் என தெரிவித்துள்ளார்.

இதனை அடுத்து சபை முதல்வர் அமைச்சர் சுசில் பிரேமஜயந்த , எதிர்க்கட்சிகளின் பிரதம அமைப்பாளர் லக்ஸ்மன் கிரியல்ல ஆகியோர் இது தொடர்பில் கருத்து தெரிவித்தனர்.


எனினும், சிறிலங்கா பொதுஜன பெரமுவின் நாடாளுமன்ற உறுப்பினர் கெவிந்து குமாரதுங்க மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச ஆகியோர் இப்பிரேரணைக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

இறுதியாக மீண்டும் எழுந்த சுமந்திரன், ரணில் விக்ரமசிங்க இந்த தனி நபர் பிரேரணையை ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் நிறைவேற்றித் தருவதாக தமக்கு உறுதியளித்திருந்தாகவும் ஆனால் அவர் தற்போது மிகப்பெரிய இனவாதியாக செயற்பட்டிருப்பதாகவும் குற்றம் சுமத்தியமை குறிப்பிடத்தக்கது.

Tags: BattinaathamnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

சுகாதார சேவை வெற்றிடங்கள் தொடர்பில் GMOA கோரிக்கை
செய்திகள்

சுகாதார சேவை வெற்றிடங்கள் தொடர்பில் GMOA கோரிக்கை

September 11, 2026
மூதூர் தள வைத்தியசாலை சிற்றுண்டிச்சாலையை மூட நீதிமன்றம் உத்தரவு!
செய்திகள்

மூதூர் தள வைத்தியசாலை சிற்றுண்டிச்சாலையை மூட நீதிமன்றம் உத்தரவு!

September 11, 2026
வாகரையில் கரைவலை படகு விபத்து
செய்திகள்

வாகரையில் கரைவலை படகு விபத்து

September 11, 2026
செஸ் வரியை நீக்கி புதிய சுங்க வரியை அறிமுகப்படுத்த திட்டம்!
செய்திகள்

செஸ் வரியை நீக்கி புதிய சுங்க வரியை அறிமுகப்படுத்த திட்டம்!

September 11, 2026
அரசாங்கத்துக்கு எதிராக அனைத்து இன மக்களும் ஒன்றிணைய வேண்டும்; விமல் வீரவன்ச!
செய்திகள்

அரசாங்கத்துக்கு எதிராக அனைத்து இன மக்களும் ஒன்றிணைய வேண்டும்; விமல் வீரவன்ச!

September 11, 2026
கல்முனை அல் அஸ்ஹர் வித்தியாலயத்தில் 29 மாணவர்கள் கௌரவிப்பு; 136 மாணவர்கள் வெட்டுப்புள்ளிக்கு மேல் பெற்று 96 சதவீத சித்தி!
செய்திகள்

கல்முனை அல் அஸ்ஹர் வித்தியாலயத்தில் 29 மாணவர்கள் கௌரவிப்பு; 136 மாணவர்கள் வெட்டுப்புள்ளிக்கு மேல் பெற்று 96 சதவீத சித்தி!

September 11, 2026
Next Post
இலங்கை பொலிஸாருடன் இணைய முன்வந்துள்ள அவுஸ்திரேலியா!

இலங்கை பொலிஸாருடன் இணைய முன்வந்துள்ள அவுஸ்திரேலியா!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.