தமிழகத்தை காப்பாற்ற முடியாத முதல்வர் ஸ்டாலின் பீஹார் சென்று அனைத்துக் கட்சித் தலைவர்களுடன்
சேர்ந்து பிரதமரை உருவாக்குகிறாராம் என்று அ. தி. மு. க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.நேற்று நிகழ்வு ஒன்றில் பங்கேற்ற அவர்”இந்தியாவில் அதிக தார்சாலை கொண்ட மாநிலம்
தமிழ்நாடுதான். கிராமத்தில் பேருந்து போக்குவரத்துக்கான சாலைகளை தார் சாலைகளாக மாற்றினோம்.
கிராம் நகரம் என அனைத்து பகுதிகளுக்கும் பேருந்து வசதி ஏற்படுத்தி கொடுக்கப்பட்டுள்ளது. தி. மு. க. ஆட்சி பொறுப்பேற்றப் பிறகு அ. தி. மு. க. கொண்டு வந்த ஒவ்வொரு திட்டத்தையும் ரத்து செய்கின்ற காட்சியைத்தான் சாதனையாக பார்க்கிறோம்.
கூரை ஏறி கோழி பிடிக்காதவன் வானம் ஏறி வைகுண்டம் போனான். அதுபோல் தமிழகத்தை காப்பாற்ற முடியாத ஸ்டாலின் பீஹார் சென்று சர்வகட்சித் தலைவர்களுடன் சேர்ந்து நாட்டின் பிரதமரை உருவாக்கிறாராம்.
செந்தில் பாலாஜி தமிழகத் தில் மதுபான கடைகள் மூலம் ஒரு நாளைக்கு 10 கோடி ரூபாய்
என வருடத்துக்கு 3600 கோடி ரூபாய் ஊழல் செய்துள்ளார். இதற்குதான் மத்திய அரசாங்கம்
அவரை கைது செய்தது – என்றார்.