Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
தமிழ் மக்கள் மத்தியில் பெற்றிருக்கும் செல்வாக்கை ஒருபோதும் தனக்காகப் பயன்படுத்திக் கொள்ளப்போவதில்லை என அரியநேத்திரன் தெரிவிப்பு!

தமிழ் மக்கள் மத்தியில் பெற்றிருக்கும் செல்வாக்கை ஒருபோதும் தனக்காகப் பயன்படுத்திக் கொள்ளப்போவதில்லை என அரியநேத்திரன் தெரிவிப்பு!

2 years ago
in மட்டு செய்திகள்

எதிர்வரும் நாடாளுமன்றத்தேர்தலில் போட்டியிடப்போவதில்லை என ஜனாதிபதி வேட்பாளர் பா.அரியநேத்திரன் தெரிவித்துள்ளார்.

அதாவது, இம்முறை ஜனாதிபதித்தேர்தலில் தமிழ் பொதுவேட்பாளராகக் களமிறங்கியிருப்பதன் மூலம் தமிழ் மக்கள் மத்தியில் பெறுகின்ற செல்வாக்கைத் தனக்கு சாதகமாகப் பயன்படுத்தி கொள்ளமாட்டேன் என குறிப்பிட்டுள்ளார்.

நாட்டின் ஒன்பதாவது ஜனாதிபதித்தேர்தல் எதிர்வரும் 21 ஆம் திகதி நடைபெறவுள்ளது.

அதில் தமிழ் தேசிய பொதுக்கட்டமைப்பினரால் வட, கிழக்கு தமிழ் மக்கள் சார்பில் இலங்கைத் தமிழரசுக்கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் பொதுவேட்பாளராகக் களமிறக்கப்பட்டிருக்கின்றார்.

இத்தேர்தலில் அவர் வெல்லப்போவதில்லை என்றாலும், இதன்மூலம் கிடைக்கப்பெறும் செல்வாக்கைப் பயன்படுத்தி எதிர்வரும் நாடாளுமன்றத்தேர்தலில் போட்டியிட்டு வெல்லக்கூடும் என்ற கருத்துக்கள் பல்வேறு தரப்பினராலும் முன்வைக்கப்பட்டுவருகின்றன.

இவ்வாறானதொரு பின்னணியில் எதிர்வரும் நாடாளுமன்றத்தேர்தலில் தான் போட்டியிடப்போவதில்லை என அரியநேத்திரன் தெரிவித்துள்ளார்.

இம்முறை ஜனாதிபதித்தேர்தலில் தமிழ் பொதுவேட்பாளராகக் களமிறங்கியிருப்பதன் மூலம் வட, கிழக்கு தமிழ் மக்கள் மத்தியில் பெற்றிருக்கும் செல்வாக்கை ஒருபோதும் தனக்காகப் பயன்படுத்திக்கொள்ளப்போவதில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.

அதேவேளை தமிழ் பொதுக்கட்டமைப்பில் அங்கம் வகிக்கும் தமிழ் தேசிய அரசியல் கட்சிகள் அல்லாத ஏனைய சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகள் எதிர்வரும் நாடாளுமன்றத்தேர்தலில் போட்டியிடும் உத்தேசத்தைக் கொண்டிருக்கிறார்களாக என எழுப்பப்பட்ட கேள்விக்கு, அவ்வாறானதொரு கருத்தை அவர்கள் இதுவரையில் எங்கும் கூறவில்லை எனவும், அவர்கள் அத்தகைய உத்தேசத்தில் இருப்பதாகத் தனக்குத் தெரியவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

அதேபோன்று எதிர்வரும் நாடாளுமன்றத்தேர்தலில் தமிழ் பொதுக்கட்டமைப்பில் அங்கம்வகிக்கும் சிவில் சமூகப் பிரதிநிதிகள் களமிறங்குவார்கள் என்று தான் கருதவில்லை.

மாறாக பொதுக்கட்டமைப்பில் அங்கம் வகிக்கும் தமிழ் தேசிய அரசியல் கட்சிகள் அவர்களது அரசியல் செயற்பாடுகளைத் தொடர்ந்து முன்னெடுத்துச்செல்வார்கள் எனவும் அரியநேத்திரன் விளக்கமளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புடையசெய்திகள்

கோட்டைக்கல்லாற்றில் வீதியோரம் நின்ற சிறுவர்கள் மீது மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் 17 வயது சிறுவன் பலி-4 பேர் படுகாயம்-CCTV
காணொளிகள்

கோட்டைக்கல்லாற்றில் வீதியோரம் நின்ற சிறுவர்கள் மீது மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் 17 வயது சிறுவன் பலி-4 பேர் படுகாயம்-CCTV

August 23, 2026
மட்டக்களப்பில் 74,900 ஹெக்டேயரில் பெரும்போக நெற்செய்கை; உரம், நீர் முகாமைத்துவம் குறித்து விசேட கவனம்!
செய்திகள்

மட்டக்களப்பில் 74,900 ஹெக்டேயரில் பெரும்போக நெற்செய்கை; உரம், நீர் முகாமைத்துவம் குறித்து விசேட கவனம்!

August 22, 2026
மட்டக்களப்பில் வறட்சி காரணமாக நாளை முதல் 4 மணி நேர நீர் வெட்டு; மாவட்ட பிராந்திய முகாமையாளர் எந்திரி எஸ். ஜயந்தன் அறிவிப்பு
செய்திகள்

மட்டக்களப்பில் வறட்சி காரணமாக நாளை முதல் 4 மணி நேர நீர் வெட்டு; மாவட்ட பிராந்திய முகாமையாளர் எந்திரி எஸ். ஜயந்தன் அறிவிப்பு

August 21, 2026
வாகரை, வாழைச்சேனை, காயான்கேணி பகுதிகளில் காணிகளை சூறையாடியுள்ள ஹிஸ்புல்லா!
காணொளிகள்

வாகரை, வாழைச்சேனை, காயான்கேணி பகுதிகளில் காணிகளை சூறையாடியுள்ள ஹிஸ்புல்லா!

August 21, 2026
மாமாங்கத்தில் மோட்டார் சைக்கிள் சீட்டை உடைத்து நகை, பணம் திருட்டு; சந்தேகநபர் கைது!
செய்திகள்

மாமாங்கத்தில் மோட்டார் சைக்கிள் சீட்டை உடைத்து நகை, பணம் திருட்டு; சந்தேகநபர் கைது!

August 21, 2026
ஆலயத்தில் தாக்குதல்; மட்டு மாநகரசபை உறுப்பினர் உள்ளிட்ட இருவர் வைத்தியசாலையில் அனுமதி!
செய்திகள்

ஆலயத்தில் தாக்குதல்; மட்டு மாநகரசபை உறுப்பினர் உள்ளிட்ட இருவர் வைத்தியசாலையில் அனுமதி!

August 21, 2026
Next Post
கொழும்பு கோட்டை ரஜ மகா விகாரைக்கு சஜித் விஜயம்!

கொழும்பு கோட்டை ரஜ மகா விகாரைக்கு சஜித் விஜயம்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு