Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
அதிபர் இடமாற்றத்தை இரத்து செய்யக் கோரி ஏறாவூர் மிஸ்நகர் அல்-அஷ்ரப் வித்தியாலயத்தில் ஆர்ப்பாட்டம்!

அதிபர் இடமாற்றத்தை இரத்து செய்யக் கோரி ஏறாவூர் மிஸ்நகர் அல்-அஷ்ரப் வித்தியாலயத்தில் ஆர்ப்பாட்டம்!

3 months ago
in செய்திகள், மட்டு செய்திகள், முக்கிய செய்திகள்

மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்திற்குட்பட்ட ஏறாவூர் மிஸ்நகர் அல்-அஷ்ரப் வித்தியாலயத்தில் தற்போது பணியாற்றி வரும் அதிபரின் இடமாற்றத்தை ரத்து செய்ய வேண்டும் என்பதுடன், பாடசாலையில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறையை உடனடியாக நிவர்த்தி செய்ய வேண்டும் என வலியுறுத்தி பொதுமக்கள் இன்று (11.06.2026) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பாடசாலையின் நுழைவாயில் மறிக்கப்பட்டு ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டதால், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் பாடசாலைக்குள் செல்ல முடியாமல் போனது. இதன் காரணமாக அன்றைய தினம் பாடசாலை நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டன.

பெற்றோர் மற்றும் பாடசாலையின் பழைய மாணவர்கள் இணைந்து இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தை ஏற்பாடு செய்திருந்தனர்.

ஆர்ப்பாட்டம் நடைபெற்ற இடத்திற்கு ஏறாவூர் பொலிஸார் வருகை தந்ததுடன், வலயக் கல்விப் பணிப்பாளர் எம். எம். ஜவாத், பிரதிக் கல்விப் பணிப்பாளர்கள், உதவிக் கல்விப் பணிப்பாளர்கள் மற்றும் கோட்டக் கல்வி அதிகாரி ஏ. எல். அபுல்ஹஸன் ஆகியோரும் வருகை தந்து ஆர்ப்பாட்டக்காரர்களுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டனர்.

பாடசாலை நீண்டகாலமாக தகுதியான அதிபர் மற்றும் போதிய ஆசிரியர்கள் இன்றி புறக்கணிக்கப்பட்டு வருவதால் கல்வித் தரத்தில் பின்தங்கியுள்ளதாக ஆர்ப்பாட்டக்காரர்கள் தெரிவித்தனர். இந்நிலையில், கடந்த இரண்டு ஆண்டுகளாக அதிபராக கடமையாற்றி வந்தவர் திடீரென இடமாற்றம் செய்யப்பட்டிருப்பது கவலையளிப்பதாகவும் அவர்கள் குறிப்பிட்டனர்.

இடமாற்றத் தீர்மானம் ரத்து செய்யப்படும் வரை தமது பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்பமாட்டோம் என பெற்றோர் தெரிவித்ததுடன், பாடசாலை வளாகத்திற்கு வந்திருந்த மாணவர்களையும் மீண்டும் வீடுகளுக்கு அழைத்துச் சென்றனர்.

இதுகுறித்து கருத்துத் தெரிவித்த வலயக் கல்விப் பணிப்பாளர், தற்போது பதில் அதிபராக பொறுப்பில் உள்ள அதிகாரி தொடர்பாக அலுவலக மட்ட விசாரணை முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், விசாரணை நிறைவடையும் வரை அவர் தற்காலிகமாக வேறொரு பாடசாலைக்கு இணைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். மேலும், இவ்விடயம் தொடர்பில் விரைவில் சுமுகமான தீர்வு எட்டப்படும் எனவும் உறுதியளித்தார்.

இதனையடுத்து பொலிஸாரின் ஒத்துழைப்புடன் பாடசாலையின் நுழைவாயில் திறக்கப்பட்டதுடன், ஆசிரியர்கள் தமது வருகையைப் பதிவு செய்தனர்.

தரம் 1 முதல் 5 வரை வகுப்புகள் நடைபெறும் இப்பாடசாலையில் தற்போது 138 மாணவர்கள் கல்வி கற்று வருகின்றனர்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

ரோஹிங்கியா முஸ்லிம்கள் அகதிகள் அல்ல அவர்கள் தீவிரவாதிகள் !
செய்திகள்

ரோஹிங்கியா முஸ்லிம்கள் அகதிகள் அல்ல அவர்கள் தீவிரவாதிகள் !

September 12, 2026
கைது செய்யப்பட்ட ஷிரான் பாஸிக்கின் தந்தை விளக்கமறியலில்
செய்திகள்

கைது செய்யப்பட்ட ஷிரான் பாஸிக்கின் தந்தை விளக்கமறியலில்

September 12, 2026
மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான மொட்டு கட்சிக் கூட்டத்தில் அர்ச்சுனா எம்.பி. பங்கேற்பு!
செய்திகள்

மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான மொட்டு கட்சிக் கூட்டத்தில் அர்ச்சுனா எம்.பி. பங்கேற்பு!

September 12, 2026
நல்லூர் தேர் திருவிழாவில் தாலிக்கொடி அறுத்த பெண் கைது!
செய்திகள்

நல்லூர் தேர் திருவிழாவில் தாலிக்கொடி அறுத்த பெண் கைது!

September 12, 2026
விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அமைச்சின் புதிய செயலாளராக ரோஷனி திசாநாயக நியமனம்!
செய்திகள்

விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அமைச்சின் புதிய செயலாளராக ரோஷனி திசாநாயக நியமனம்!

September 12, 2026
முல்லைத்தீவில் 77 குடும்பங்களுக்கு குடிநீர் இணைப்புகள் வழங்கல்!
செய்திகள்

முல்லைத்தீவில் 77 குடும்பங்களுக்கு குடிநீர் இணைப்புகள் வழங்கல்!

September 12, 2026
Next Post
ஈரான் மீது அமெரிக்கா கடுமையான தாக்குதல் நடத்தும்; டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை!

ஈரான் மீது அமெரிக்கா கடுமையான தாக்குதல் நடத்தும்; டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.