Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மட்டக்களப்பில் புதிய தமிழ் திரைப்படம் ‘#இமு’ பூஜையுடன் ஆரம்பம்!

மட்டக்களப்பில் புதிய தமிழ் திரைப்படம் ‘#இமு’ பூஜையுடன் ஆரம்பம்!

3 months ago
in செய்திகள், மட்டு செய்திகள்

ஈழத்துத் திரையுலகில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ‘#இமு’ எனும் புதிய முழுநீளத் தமிழ் திரைப்படத்தின் பூஜை விழா மட்டக்களப்பில் பக்திப்பூர்வமாக நடைபெற்றது.

திரைப்படத்தின் ஆரம்ப நிகழ்வுகள் கீரிமடு ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயத்தில் விசேட வழிபாடுகளுடன் ஆரம்பமானது. தயாரிப்பாளர் ரோஜஸ் டி சில்வாவின் தாயார், ஆலய சன்னிதானத்தில் முதல் ‘கிளாப்’ அடித்து படப்பிடிப்பை சம்பிரதாயபூர்வமாக தொடங்கி வைத்தார்.

இதனைத் தொடர்ந்து மத நல்லிணக்கத்தை வலியுறுத்தும் வகையில், தாண்டவன்வெளி புனித காணிக்கை மாதா ஆலயம், மங்களராமய ரஜமஹா விகாரை மற்றும் கோட்டைமுனை ஹியாபுத்தீன் வலியுல்லாஹ் தர்ஹா ஆகிய இடங்களிலும் விசேட ஆசிர்வாத நிகழ்வுகள் இடம்பெற்றன.

மட்டக்களப்பின் இளம் இயக்குநரான கீ. கிஷாந்தின் இயக்கத்தில் உருவாகும் இந்த திரைப்படத்தில் பிரதிஜன் மற்றும் தனுஷ்கா ஆகியோர் கதாநாயகன், கதாநாயகியாக நடிக்கின்றனர். யுவநாதன், துஷி, சுகுமார் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் இடம்பெறுகின்றனர்.

திரைப்படத்தின் ஒளிப்பதிவை நிருஷாந்த் மேற்கொள்கின்றார். இசை மற்றும் படத்தொகுப்பு பணிகளையும் இயக்குநர் கீ. கிஷாந்தே கவனித்து வருகிறார்.

இத்திரைப்படத்தின் சிறப்பம்சமாக, மட்டக்களப்பின் முன்னணி தயாரிப்பாளரும் கதாசிரியருமான முரளிதரன் வில்லன் கதாபாத்திரத்தில் அறிமுகமாகின்றார். அவரது நடிப்பு திரைப்படத்திற்கு புதிய பரிமாணத்தை வழங்கும் என படக்குழுவினர் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.

மட்டக்களப்பு கலைஞர்களின் கூட்டுப் பங்களிப்பில் உருவாகும் ‘#இமு’ திரைப்படம், ஈழத்துத் தமிழ் சினிமாவிற்கு புதிய அடையாளத்தை உருவாக்கும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் காணப்படுகிறது.

இதேவேளை, இலங்கையில் தமிழ் திரைப்படங்களை தயாரித்து வெளியிடுவது பல சவால்களை உள்ளடக்கியதாக இருந்தாலும், உள்ளூர் படைப்புகளுக்கு தமிழ் மக்கள் மற்றும் புலம்பெயர் சமூகங்கள் ஆதரவு வழங்க வேண்டிய அவசியம் இருப்பதாக கலை ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

ரோஹிங்கியா முஸ்லிம்கள் அகதிகள் அல்ல அவர்கள் தீவிரவாதிகள் !
செய்திகள்

ரோஹிங்கியா முஸ்லிம்கள் அகதிகள் அல்ல அவர்கள் தீவிரவாதிகள் !

September 12, 2026
கைது செய்யப்பட்ட ஷிரான் பாஸிக்கின் தந்தை விளக்கமறியலில்
செய்திகள்

கைது செய்யப்பட்ட ஷிரான் பாஸிக்கின் தந்தை விளக்கமறியலில்

September 12, 2026
மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான மொட்டு கட்சிக் கூட்டத்தில் அர்ச்சுனா எம்.பி. பங்கேற்பு!
செய்திகள்

மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான மொட்டு கட்சிக் கூட்டத்தில் அர்ச்சுனா எம்.பி. பங்கேற்பு!

September 12, 2026
நல்லூர் தேர் திருவிழாவில் தாலிக்கொடி அறுத்த பெண் கைது!
செய்திகள்

நல்லூர் தேர் திருவிழாவில் தாலிக்கொடி அறுத்த பெண் கைது!

September 12, 2026
விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அமைச்சின் புதிய செயலாளராக ரோஷனி திசாநாயக நியமனம்!
செய்திகள்

விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அமைச்சின் புதிய செயலாளராக ரோஷனி திசாநாயக நியமனம்!

September 12, 2026
முல்லைத்தீவில் 77 குடும்பங்களுக்கு குடிநீர் இணைப்புகள் வழங்கல்!
செய்திகள்

முல்லைத்தீவில் 77 குடும்பங்களுக்கு குடிநீர் இணைப்புகள் வழங்கல்!

September 12, 2026
Next Post
உலக அமைதிக் குறியீட்டில் இலங்கைக்கு 14 இடங்கள் முன்னேற்றம்!

உலக அமைதிக் குறியீட்டில் இலங்கைக்கு 14 இடங்கள் முன்னேற்றம்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.