Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
தெற்கு அதிவேகசாலையில் திடீரென தீப்பற்றிய கெப் வாகனம்!

தெற்கு அதிவேகசாலையில் திடீரென தீப்பற்றிய கெப் வாகனம்!

2 years ago
in செய்திகள்

இரண்டு பொறியியலாளர்கள் பயணித்த கெப் வண்டியொன்று நேற்று (10) காலை தெற்கு அதிவேக வீதியின் கொட்டாவை பகுதியில் திடீரென தீப்பிடித்து எரிந்துள்ளது.

தீயினால் கெப் வாகனம் தீக்கிரையாகியுள்ளதாக அத்துருகிரிய அதிவேக வீதி கட்டுப்பாட்டு மத்திய நிலையம் குறிப்பிட்டுள்ளது.

இந்த தீ விபத்தில் கெப் வண்டியில் பயணித்தவர்களுக்கு காயங்கள் ஏதும் ஏற்படவில்லை.

கொழும்பு பிரதேசத்தில் உள்ள நிறுவனமொன்றின் பொறியியலாளர்கள் இருவர் காலி பிரதேசத்தில் வர்த்தகர்களுக்கான பயிற்சி பட்டறை ஒன்றை நடத்துவதற்காக சென்று கொண்டிருந்த போது, இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இரண்டு பொறியாளர்கள் மற்றும் சாரதியும் கெப் வாகனத்தை விட்டு வெளியே வந்தவுடன் வாகனத்தின் முன்பக்கத்தில் இருந்து புகை வந்து தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

தீ விபத்து ஏற்பட்டதையடுத்து உடனடியாக தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டு தீயை அணைத்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

வாகனத்தின் சுமார் 75 % தீயில் எரிந்து நாசமாகியுள்ளது.

இயந்திரக் கோளாறு காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

தீ விபத்து காரணமாக கடுவெலயிலிருந்து மாத்தறை நோக்கிச் சென்ற வாகனங்கள் சுமார் 15 நிமிடம் நிறுத்தப்பட்டதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

அத்துருகிரிய அதிவேக வீதியின் கட்டுப்பாட்டு மத்திய நிலையம் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.

Tags: BattinaathamnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

மாணவர்களை இலக்கு வைத்து போதை மாத்திரைகள் விற்பனை; ஒருவர் கைது
செய்திகள்

மாணவர்களை இலக்கு வைத்து போதை மாத்திரைகள் விற்பனை; ஒருவர் கைது

September 20, 2026
‘சில வரிகள் நீக்கப்படும்’; ஜனாதிபதி வெளியிட்டுள்ள அறிவிப்பு!
செய்திகள்

‘சில வரிகள் நீக்கப்படும்’; ஜனாதிபதி வெளியிட்டுள்ள அறிவிப்பு!

September 20, 2026
அமேசன் காடுகளின் நடுவே பழங்குடியினர் கிராமம்; வைரலாகும் வீடியோ!
காணொளிகள்

அமேசன் காடுகளின் நடுவே பழங்குடியினர் கிராமம்; வைரலாகும் வீடியோ!

September 20, 2026
அனோஜனுக்கு ஆதரவாக ஹட்டனில் கொட்டும் மழையிலும் ஆர்ப்பாட்டம்!
செய்திகள்

அனோஜனுக்கு ஆதரவாக ஹட்டனில் கொட்டும் மழையிலும் ஆர்ப்பாட்டம்!

September 20, 2026
48 கடவுச்சீட்டுகளை வைத்திருந்த நபர் ஒருவர் கைது!
செய்திகள்

48 கடவுச்சீட்டுகளை வைத்திருந்த நபர் ஒருவர் கைது!

September 20, 2026
பல பிரதான ஆறுகள் மற்றும் நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் உயர்வு; பல பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!
செய்திகள்

பல பிரதான ஆறுகள் மற்றும் நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் உயர்வு; பல பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!

September 20, 2026
Next Post
இராணுவ வாகனம் மோதியதில் ஒருவர் உயிரிழப்பு!

இராணுவ வாகனம் மோதியதில் ஒருவர் உயிரிழப்பு!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு