எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தான் வெற்றி பெற்றால், பிரதமர் பதவியை மகிந்த ராஜபக்சவுக்கு வழங்கவுள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
குறித்த விடயத்தை நேற்று (11) அரசியல் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையில் நாமல் ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.
அதேநேரம் தான் வெற்றி பெற்றால் எதிர்வரும் 22ஆம் திகதியே நாடாளுமன்றம் கலைக்கப்படும். தமது தரப்பினரின் ஒத்துழைப்புடன் இடைக்கால அமைச்சரவை ஒன்று உருவாக்கப்படும் என நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
இதேவேளை, ஶ்ரீ லங்கா பொதுஜன முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ச பங்கேற்கவிருந்த பிரசார கூட்டத்தின் மீது கல் வீச்சுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் அம்பாந்தோட்டை – சிறிபோபுர பகுதியில் நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் இடம்பெற்றுள்ளது.
இந்த கல் வீச்சு தாக்குதல்களில் சிறுவன் ஒருவர் காயமடைந்துள்ளார். காயமடைந்த சிறுவன் அம்பாந்தோட்டை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இந்த பிரசார கூட்டத்தில் நாமல் ராஜபக்ச, சமல் ராஜபக்ச, ஷிராந்தி ராஜபக்ச ஆகியோர் பங்கேற்கவிருந்தனர்.