ஸ்ரீலங்கன் விமான நிறுவனத்தின் விமான சேவை தாமதம் காரணமாக தென்கொரியாவிற்கு செல்ல முடியாதவர்களுக்கு இழக்கும் நிலை ஏற்படவில்லை என வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.
சரியான நேரத்தில் கொரியாவுக்கு செல்ல முடியாமல் போன 52 பேரின் தொழில்களில் பிரச்சினை ஏற்பட்டிருந்தது.
இது தொடர்பில் அமைச்சர் மனுஷ நாணயக்கார, தென் கொரிய மனிதவளத் திணைக்கள அதிகாரிகளுடன் நடத்திய கலந்துரையாடலின் மூலம் இவர்களுக்கு தென் கொரியாவுக்குச் செல்வதற்கான வாய்ப்பு மீண்டும் கிடைத்துள்ளது.
எவ்வாறாயினும் குறித்த குழுவினர் மீண்டும் தென்கொரியாவிற்கு சென்றுள்ளதாக பணியகம் தெரிவித்துள்ளது.
இந்தக் குழு தொழில் வாய்ப்புகளுக்காக தென் கொரியாவுக்கு விஜயம் செய்யும் 801ஆவது குழுவாகும்.