Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
நான் ஆட்சிக்கு வந்தால் பிள்ளையானை கைது செய்வேன்; சஜித் உறுதி!

நான் ஆட்சிக்கு வந்தால் பிள்ளையானை கைது செய்வேன்; சஜித் உறுதி!

2 years ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

ஈஸ்டர் குண்டு வெடிப்புடன் தொடர்புடைய பிள்ளையான் போன்ற கொலையாளிகள் கைது செய்யப்படுவார்கள், இது எனது அரசாட்சியில் நிறைவேற்றப்படும் என சஜித் பிரேமதாச உறுதியளித்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்ட இலங்கை தமிழரசுக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தலைமையில் களுவாஞ்சிக்குடியில் அமைந்துள்ள அவரது அலுவலகத்தில் ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளருக்கும், இலங்கை தமிழரசுக்கட்சியின் மாவட்ட , தொகுதி, பிரதேச , கிராமிய குழு உறுப்பினர்கள், ஆதரவாளர்கள், மத்திய குழு உறுப்பினர்கள் ,மாவட்ட இளைஞர் அணி , மகளீர் அணியுடனான விசேட கலந்துரையாடல் நேற்று ஞாயிற்றுக்கிழமை ( 15 ) இடம்பெற்றது.

களுதாவளை விளையாட்டு மைதானத்திற்கு ஹெலிகாப்டர் மூலம் வருகை தந்த ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச அவர்களை மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் அவர்கள் மற்றும் களுதாவளை கிராமிய குழு தலைவர் பார்த்தீபன் வரவேற்று , பின்னர் களுதாவளை கல்லடி பிள்ளையார் ஆலயத்திலும் வழிபாட்டில் ஈடுபட்டனர் , பின் களுவாஞ்சிகுடியில் இந்த விசேட சந்திப்பு இடம்பெற்று இருந்தமை குறிப்பிடத்தக்கது .

இதன் போது கருத்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் மட்டக்களப்பு மாவட்டத்தில் குறிப்பாக மயிலத்தமடுமாதவனை பண்ணையாளர் பிரச்சினைக்கான தீர்வினையும், அம்பாறை, கல்முனை வடக்கு பிரதேச செயலகத்திற்கான தீர்வினையும் , ஈஸ்டர் குண்டு தாக்குதல் தொடர்பான பிரதான சூத்திரதாரியினையும் , அதனோடு தொடர்புடைய சகலரையும் கைது செய்து நீதியை நிலைநாட்டுவதோடு , பிள்ளையான் போன்ற கொலையாளிகளும் கைது செய்ய வேண்டும் எனவும் , வாகரை இல்மனைட் அகழ்வுடன் தொடர்புடைய காணி திருடர்கள், சட்ட விரோத மண் கடத்தல் கார கும்பல் உட்பட பல கள்வர்கள், மட்டக்களப்பிலிருந்து அகற்றப்பட வேண்டும் எனவும் இவ்வாறான விசமிகள் கைது செய்யப்பட வேண்டும் எனவும் கருத்து தெரிவித்தார்.

மேலும் கருத்து தெரிவிக்கையில் இலங்கை தமிழரசுக்கட்சியின் மத்திய குழு கூடி ஏகமனதாக தீர்மானித்து ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவிற்கு ஆதரவு தெரிவித்ததாகவும் பாராளுமன்ற உறுப்பினர் இரா சாணக்கியன் கருத்து தெரிவித்தார்.

இவ்வாறான மட்டக்களப்பு மற்றும் அம்பாறை உட்பட அனைத்து பிரதேசங்களிலும் குறிப்பாக வடக்கு கிழக்கில் காணப்படும் தமிழர்களுக்கான நிரந்தரமான அரசியல் தீர்வையும் இவ்வாறான கொலையாளிகள், கள்வர்கள் மற்றும் சாணக்கியன் அவர்கள் தெரிவித்த முன்வைத்த அனைத்து கோரிக்கைகளையும் தமது அரசாட்சியில் இதற்கான நீதி நிலைநாட்டப்படும் என்பதனையும் ஐக்கிய மக்கள் கட்சியினுடைய ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச உறுதியளித்தார்.

அதனையும் தாண்டி குறிப்பாக நல்லாட்சிய அரசாங்க காலப்பகுதியில் தான் அமைச்சராக கடமையை ஏற்று இருந்த காலப்பகுதியில் முடிக்கப்படாமல் இருக்கின்ற அனைத்து வீட்டுதிட்ட வேலைகள் அனைத்தும் ஒரு மாத கால பகுதிக்குள் நிறைவுறுத்தப்படுவதாகவும் கருத்து தெரிவித்தார்.

இந்நிகழ்வில் அம்பாறையில் மாவட்ட இலங்கை தமிழரசு கட்சியினுடைய பாராளுமன்ற உறுப்பினர் கலையரசன், மட்டக்களப்பு மாவட்ட மாநகர சபை முதல்வர் சரவணபவன், இலங்கையில் தமிழரசு கட்சியினுடைய மாவட்ட , தொகுதி, மத்திய , பிரதேச , கிராமிய குழு உறுப்பினர்கள் இலங்கை தமிழரசுஜகட்சியின் உடைய மட்டக்களப்பு மாவட்ட இளைஞரணி மகளிர் அணி பிரதிநிதிகள் இலங்கை தமிழர் கட்சியினுடைய ஆதரவாளர்கள் என பலர் பலர் கலந்து கொண்டனர் .

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectionmattakkalappuseythikalpoliticalnewssrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

இறக்குமதி செய்யப்பட்ட 120,000 மெட்ரிக் தொன் நிலக்கரி மாயம்; சபையில் நாமல்!
செய்திகள்

இறக்குமதி செய்யப்பட்ட 120,000 மெட்ரிக் தொன் நிலக்கரி மாயம்; சபையில் நாமல்!

September 10, 2026
காலாவதியான பேக்கரி பொருட்கள் விற்பனை; நிறுவனத்திற்கு ரூ.2 இலட்சம் அபராதம்!
செய்திகள்

காலாவதியான பேக்கரி பொருட்கள் விற்பனை; நிறுவனத்திற்கு ரூ.2 இலட்சம் அபராதம்!

September 10, 2026
கிளிநொச்சியில் வறட்சி; கால்நடைகளின் குடிநீருக்காக இரணைமடு குளத்தின் வாய்க்கால் திறப்பு
செய்திகள்

கிளிநொச்சியில் வறட்சி; கால்நடைகளின் குடிநீருக்காக இரணைமடு குளத்தின் வாய்க்கால் திறப்பு

September 10, 2026
களுதாவளையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனத்துடன் கார் மோதி விபத்து!
செய்திகள்

களுதாவளையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனத்துடன் கார் மோதி விபத்து!

September 10, 2026
2025 உயர்தரப் பரீட்சை பெறுபேறு; அரச பல்கலைக்கழகங்களுக்கு இரண்டாம் கட்ட மாணவர் தெரிவு!
செய்திகள்

2025 உயர்தரப் பரீட்சை பெறுபேறு; அரச பல்கலைக்கழகங்களுக்கு இரண்டாம் கட்ட மாணவர் தெரிவு!

September 10, 2026
வடக்கு, கிழக்கு மற்றும் மலையக மக்களின் பிரச்சினைகள் குறித்து சஜித் தலைமையில் விசேட கலந்துரையாடல்!
செய்திகள்

வடக்கு, கிழக்கு மற்றும் மலையக மக்களின் பிரச்சினைகள் குறித்து சஜித் தலைமையில் விசேட கலந்துரையாடல்!

September 10, 2026
Next Post
விளையாடுவதற்கு தொலைபேசியை கொடுக்க மறுத்த தந்தை; சிறுவன் விபரீத முடிவு!

விளையாடுவதற்கு தொலைபேசியை கொடுக்க மறுத்த தந்தை; சிறுவன் விபரீத முடிவு!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.