உலக நோயாளிகள் பாதுகாப்பு தினம் இன்று செவ்வாய்கிழமை (17) அனுசரிக்கப்படுகிறது.
‘நோயாளிகளின் பாதுகாப்பிற்காக நோயறிதலை மேம்படுத்துதல்’ என்பது இந்த ஆண்டுக்கான தொனிப்பொருளாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நோயாளிகள், குடும்பங்கள், பராமரிப்பாளர்கள், சமூகங்கள், சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் சுகாதாரப் பாதுகாப்புத் தலைவர்கள் ஆகியோர் நோயாளிகளின் பாதுகாப்பில் தங்களது அர்ப்பணிப்பைக் காட்ட வேண்டும் என்பதை கருத்தில் கொண்டு இந்த தினம் நியமிக்கப்பட்டுள்ளது.