ஜனாதிபதி வேட்பாளர் ஒருவர் அஸ்வெசும கொடுப்பனவு வேண்டுமென்றால் தனக்கு வாக்களிக்குமாறு மக்களுக்கு குறுஞ்செய்திகளை அனுப்பிய சம்பவம் தொடர்பில் சட்டத்தை நடைமுறைபடுத்துமாறு தேர்தல்கள் ஆணைக்குழுவில் பெஃப்ரல் அமைப்பு முறைப்பாடு செய்துள்ளது.
21ஆம் திகதிக்குப் பின்னர் அஸ்வெசும கொடுப்பனவு பெற வேண்டுமாயின் தமக்கு வாக்களிக்குமாறு அந்தச் செய்தியில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும், அது வாக்காளர்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாகவும் பெஃப்ரல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
அரசாங்கம் மற்றும் மக்களின் பணத்தில் குறித்த கொடுப்பனவுகள் வழங்கப்படுவதாகவும், வேட்பாளர்களின் தனிப்பட்ட பணத்தில் இருந்து வழங்கப்படுவதில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த நிலையில், சம்பவம் தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.
தேர்தலின் போது வாக்காளர்களுக்கு பல்வேறு விடயங்கள் வழங்கப்படுவதாக கூறி ஒருவர் வாக்குகளை பெறுவது தண்டனைக்குரிய குற்றமாகும் என தேர்தல் ஆணைய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.