Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
தமிழக மீனவர்களுக்கு பத்துக் கோடி ரூபா அபராதம் விதித்த புத்தளம் நீதிமன்றம்!

தமிழக மீனவர்களுக்கு பத்துக் கோடி ரூபா அபராதம் விதித்த புத்தளம் நீதிமன்றம்!

2 years ago
in செய்திகள்

இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 35 நாட்டுப் படகு மீனவர்கள், 10 விசைப் படகு மீனவர்கள் என 45 தமிழக மீனவர்களுக்கு மொத்தம் பத்துக் கோடி ரூபா அபராதம் விதித்து புத்தளம் நீதிமன்றம் நேற்று புதன்கிழமை உத்தரவிட்டுள்ளது.

இராமேஸ்வரம் அருகே பாம்பன் மீன்பிடி துறைமுகத்திலிருந்து கடலுக்குச் சென்ற அலெக்ஸ், ரஞ்சன், சார்லஸ், சூசை மார்டின் ஆகியோருக்குச் சொந்தமான நான்கு நாட்டுப் படகுகளை கைப்பற்றி அதிலிருந்த 35 மீனவர்களை இலங்கைக் கடற்படையினர் கடந்த ஆகஸ்ட் 8 ஆம் திகதியன்று கைது செய்தனர்.

35 மீனவர்கள் மீதும் எல்லை தாண்டி மீன்பிடித்தல், தடை செய்யப்பட்ட வலைகளை பயன்படுத்துதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டு புத்தளம் மாவட்டம் வாரியாபொல சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர்.

மீனவர்களின் காவல் நிறைவடைந்ததைத் தொடர்ந்து 35 மீனவர்களும் புத்தளம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

வழக்கை விசாரித்த நீதிபதி விமலரத்னா, நீளமான ஒரு நாட்டுப் படகிலிருந்த 12 மீனவர்களுக்கு தலா ரூ. 35 இலட்சம் அபராதமும், மற்ற மூன்று நாட்டுப் படகிலிருந்த 23 மீனவர்களுக்கு தலா ரூ.10 இலட்சம் அபராதமும் விதித்தார். அபராதத்தைக் கட்டத் தவறினால் மூன்று மாதம் சிறைத் தண்டனை விதித்து புத்தளம் நீதிமன்றம் உத்தரவிட்டது.

மேலும், தூத்துக்குடி மாவட்டம் தருவைகுளத்திலிருந்து அந்தோனி தேன் டெனிலா என்பவருக்குச் சொந்தமான மீன்பிடி விசைப்படகில் கடலுக்குச் சென்ற 10 மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டு புத்தளத்தில் உள்ள வாரியாபொல சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர்.

இந்த 10 விசைப்படகு மீனவர்களுக்கு தலா ரூ. 35 இலட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. அபராதத்தைக் கட்டத் தவறினால் ஆறு மாதம் சிறை தண்டனை விதித்து புத்தளம் நீதிமன்றம் உத்தரவிட்டது.

45 தமிழக மீனவர்களுக்கு ரூ.10 கோடி (இந்திய மதிப்பில் ரூ 2.76 கோடி) அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

35 தமிழக நாட்டுப் படகு மீனவர்கள் கொழும்பில் உள்ள மிரிஹான முகாமுக்குக் கொண்டு செல்லப்பட்டனர். 10 விசைப் படகு மீனவர்கள் புத்தளம் வாரியாபொல சிறையில் அடைக்கப்பட்டனர்.

Tags: BattinaathamnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

நாமல் ராஜபக்ஷவுக்கு ஆசீர்வாதம் வேண்டி மாவட்ட அமைப்பாளர் சுரேஸ்குமார் விசேட பூஜை வழிபாடு!
செய்திகள்

நாமல் ராஜபக்ஷவுக்கு ஆசீர்வாதம் வேண்டி மாவட்ட அமைப்பாளர் சுரேஸ்குமார் விசேட பூஜை வழிபாடு!

September 8, 2026
பெண்கள் மற்றும் பிள்ளைகளை தொழிலுக்கமர்த்துதல் திருத்தச் சட்டம் அமுலுக்கு வந்தது!
செய்திகள்

பெண்கள் மற்றும் பிள்ளைகளை தொழிலுக்கமர்த்துதல் திருத்தச் சட்டம் அமுலுக்கு வந்தது!

September 8, 2026
கொழும்புத் துறைமுகத்தின் டிஜிட்டல் வளர்ச்சிக்கு அமெரிக்காவிடமிருந்து 15 மில்லியன் டொலர்!
செய்திகள்

கொழும்புத் துறைமுகத்தின் டிஜிட்டல் வளர்ச்சிக்கு அமெரிக்காவிடமிருந்து 15 மில்லியன் டொலர்!

September 8, 2026
இந்த ஆண்டிற்குள் பல புதிய அதிவேக நெடுஞ்சாலைகள் பணி ஆரம்பம்!
செய்திகள்

இந்த ஆண்டிற்குள் பல புதிய அதிவேக நெடுஞ்சாலைகள் பணி ஆரம்பம்!

September 8, 2026
தனியார் துறை ஊழியர்களுக்கு இணையவழி ரயில் பருவகாலச் சீட்டு வசதி!
செய்திகள்

தனியார் துறை ஊழியர்களுக்கு இணையவழி ரயில் பருவகாலச் சீட்டு வசதி!

September 8, 2026
சபாநாயகர் இன்று வெளியிட்ட முக்கிய சட்ட அறிவிப்புகள்!
செய்திகள்

சபாநாயகர் இன்று வெளியிட்ட முக்கிய சட்ட அறிவிப்புகள்!

September 8, 2026
Next Post
ஒரு இலட்சம் வாக்கு வித்தியாசத்தில் ரணில் விக்கிரமசிங்க வெற்றிபெறுவார்; செந்தில் தொண்டமான் தெரிவிப்பு!

ஒரு இலட்சம் வாக்கு வித்தியாசத்தில் ரணில் விக்கிரமசிங்க வெற்றிபெறுவார்; செந்தில் தொண்டமான் தெரிவிப்பு!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு