புதிய ஜனாதிபதியாக அனுரகுமார திஸாநாயக்க பதவியேற்றத்துடன் பல தரப்பினரும் தங்கள் பதவிகளை இராஜினாமா செய்துவருகின்றனர்.
அதனடிப்படையில், கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் உட்பட 6 மாகாணங்களின் ஆளுநர்கள் தங்கள் பதவியை இராஜினாமா செய்துள்ளனர்.
இது தொடர்பான அறிவித்தலை வர்த்தமானி மூலம் ஜனாதிபதி செயலாளர் அறிவித்துள்ளார்.