நாட்டில் மார்பக புற்றுநோய் காரணமாக இடம்பெறும் மரணங்கள் அதிகரித்துள்ளதாகத் தேசிய புற்றுநோய் கட்டுப்பாட்டுத் திட்டம் தெரிவித்துள்ளது.
சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்ட சமூக சுகாதார வைத்திய நிபுணர் ஹசரெலி பிரனாந்து இது தொடர்பில் தெரிவிக்கையில்,
நாட்டில் வருடாந்தம் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மார்பக புற்றுநோயாளர்கள் அடையாளம் காணப்படுகின்றனர்.
அவர்களில், 5500 பேர் பெண்களாகவும் 125 பேர் ஆண்களாகவும் காணப்படுகின்றனர்.
நாட்டில் பெண்கள் மத்தியில் மார்பக புற்றுநோய் பாதிப்பு அதிகரித்து வருகின்றது.
மார்பகங்களில் கட்டிகள் தோன்றுதல், மாற்றங்கள் ஏற்படுதல், வீக்கம் ஏற்படுதல் மற்றும் சிவந்து காணப்படுதல் என்பன மார்பக புற்றுநோய்க்குரிய அறிகுறிகள் ஆகும்.
எனவே இத்தகைய, அறிகுறிகள் காணப்பட்டால் உடனடியாக வைத்தியசாலைக்குச் செல்லுமாறு அவர் மேலும் தெரிவித்துள்ளார்.