Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சூத்திரதாரிகளுக்கும், புலனாய்வு அமைப்பினருக்குமிடையே கைமாறியுள்ள பணம்; வவுணதீவு படுகொலை தொடர்பிலும் சந்தேகம்!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சூத்திரதாரிகளுக்கும், புலனாய்வு அமைப்பினருக்குமிடையே கைமாறியுள்ள பணம்; வவுணதீவு படுகொலை தொடர்பிலும் சந்தேகம்!

8 months ago
in செய்திகள், மட்டு செய்திகள், முக்கிய செய்திகள்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பிலும் அதன் பின்னர் இடம்பெற்ற விசாரணைகள் தொடர்பிலும் சிஐடியின் முன்னாள் இயக்குநர் ஷானி அபயசேகர அதிர்ச்சி தகவல்களை வெளியிட்டுள்ளார்.

பத்திரிகையாளர் சுனந்த தேசப்பிரியவின் நூல் வெளியீட்டின் பின்னர் உரையாற்றுகையில் அவர் இந்த விடயங்களை தெரிவித்துள்ளார்.

விசாரணைகளின் முக்கிய தருணங்களின் போது இராணுவ புலனாய்வாளர்கள், சிஐடியினரை தவறாக வழிநடத்தினார்கள் என தெரிவித்துள்ள அவர் புலனாய்வு அமைப்புகளிற்கும் தாக்குதல்களை மேற்கொண்டவர்களிற்கும் இடையில் நிதி தொடர்புகள் காணப்பட்டிருக்கலாம் என பாரதூரமான கருத்தை வெளியிட்டுள்ளார்.

2019 ஏப்பிரல் 21ம் திகதி 250 பேரை பலிகொண்ட தாக்குதல் தனித்த ஒரு சம்பவம் அல்ல, நன்கு திட்டமிடப்பட்டு முன்னெடுக்கப்பட்ட ஒன்று என தெரிவித்துள்ள அவர், விசாரணைகளின் போது இராணுவ புலானய்வு பிரிவினர் இரண்டு தடவை விசாரணையாளர்களை தவறாக வழிநடத்த முயன்றனர் என தெரிவித்துள்ளார்.

தெகிவளையில் உயிரிழந்த தற்கொலை குண்டுதாரி தொடர்பாக இராணுவ புலனாய்வு பிரிவினர் தவறாக வழிநடத்தினார்கள் என தெரிவித்துள்ள ஷானி அபயசேகர, அந்த தற்கொலை குண்டுதாரிக்கு இராணுவ புலனாய்வாளர்களுடன் தொடர்பிருக்கலாம் இது மறைக்கப்பட்டது என குறிப்பிட்டுள்ளார்.

இரண்டாவதாக, உயிர்த்த ஞாயிறுதாக்குதலிற்கு முன்னர் இடம்பெற்ற வவுணதீவு படுகொலைகளை( 2018) விடுதலைப்புலிகளே மேற்கொண்டனர் என இராணுவ புலனாய்வு பிரிவினர் குற்றம் சாட்டினார்கள், தங்களின் கதையை வலுப்படுத்துவதற்காக இராணுவசீருடையையும் அங்குமறைத்து வைத்தனர் என சிஐடியின் முன்னாள் இயக்குநர் தெரிவித்துள்ளார்.

ஏப்பிரல் 25 ம் திகதி இந்த படுகொலையுடன் தொடர்புடைய சந்தேகநபரை சிஐடியினர் ஆயுதங்களுடன் கைது செய்த பின்னரே உயிர்த்த ஞாயிறு தாக்குதலிற்கு காரணமான ஷஹ்ரான் ஹாசிம் குழுவினர் இந்த கொலையுடன் தொடர்புபட்டுள்ளனர் என்பது தெரியவந்தது என அவர் தெரிவித்துள்ளார்.

உயிர்த்த ஞாயிறுதாக்குதல் குறித்து விசாரணைகளை மேற்கொண்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் முன்னிலையில் சாட்சியமளித்த புலனாய்வு பிரிவின் உயர் அதிகாரியொருவர், தாக்குதலை மேற்கொண்ட குழுவினருக்கு இலங்கையின் புலனாய்வு பிரிவினர் நிதி உதவி செய்தனர் என தெரிவித்திருந்தார், இது குறித்து முழுமையாக விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும் என ஷானி அபயசேகர வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மட்டக்களப்பு,வவுணதீவு கொலையை விடுதலைப்புலிகளே மேற்கொண்டனர் என நான்கு தடவை இராணுவபுலனாய்வாளர்கள் தவறாக வழிநடத்தினார்கள், என தெரிவித்துள்ள ஷானி அபயசேகர இதற்கான நோக்கம் என்னவென சந்தேகம் வெளியிட்டுள்ளார்.

Tags: BattinaathamnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

காஸா போரில் இஸ்ரேல் இராணுவத்துக்கு ஏஐ மூலம் உதவியதாக மைக்ரோசொப்ட் நிறுவனம் ஒப்புக்கொண்டது
உலக செய்திகள்

காஸா போரில் இஸ்ரேல் இராணுவத்துக்கு ஏஐ மூலம் உதவியதாக மைக்ரோசொப்ட் நிறுவனம் ஒப்புக்கொண்டது

May 18, 2025
பல்லாயிரக்கணக்கான மக்களின் உணர்வெழுச்சியுடன் கண்ணீரில் நனைந்த முள்ளிவாய்க்கால் முற்றம்
செய்திகள்

பல்லாயிரக்கணக்கான மக்களின் உணர்வெழுச்சியுடன் கண்ணீரில் நனைந்த முள்ளிவாய்க்கால் முற்றம்

May 18, 2025
நாட்டை சூழவுள்ள கடற்பிராந்தியங்களில் கடல் கொந்தளிப்பாக காணப்படும் என எச்சரிக்கை!
செய்திகள்

நாட்டை சூழவுள்ள கடற்பிராந்தியங்களில் கடல் கொந்தளிப்பாக காணப்படும் என எச்சரிக்கை!

May 18, 2025
தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவின் பிரதம நிறைவேற்று அதிகாரி உயிர் அச்சுறுத்தல் காரணமாக இராஜினாமா
செய்திகள்

தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவின் பிரதம நிறைவேற்று அதிகாரி உயிர் அச்சுறுத்தல் காரணமாக இராஜினாமா

May 18, 2025
மட்டு கல்லடிப் பாலத்திற்கு அருகில் சுவாமி விபுலானந்தரின் 12 அடி உயரம் கொண்ட கற்சிலை திறப்பு
காணொளிகள்

மட்டு கல்லடிப் பாலத்திற்கு அருகில் சுவாமி விபுலானந்தரின் 12 அடி உயரம் கொண்ட கற்சிலை திறப்பு

May 18, 2025
நாட்டின் ஊடாக தென்மேற்கு பருவமழை படிப்படியாக நிலைபெற்று வருவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறல்
செய்திகள்

நாட்டின் ஊடாக தென்மேற்கு பருவமழை படிப்படியாக நிலைபெற்று வருவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறல்

May 18, 2025
Next Post
மட்டு குருக்கள் மடம் பறவைகள் சரணாலயத்தில் தீப்பரவல்!

மட்டு குருக்கள் மடம் பறவைகள் சரணாலயத்தில் தீப்பரவல்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு