Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மட்டு குருக்கள் மடம் பறவைகள் சரணாலயத்தில் தீப்பரவல்!

மட்டு குருக்கள் மடம் பறவைகள் சரணாலயத்தில் தீப்பரவல்!

2 years ago
in செய்திகள், மட்டு செய்திகள்

புதிய இணைப்பு

மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஏத்தாளைக்குளம் காட்டுப்பகுதியில் ஏற்பட்ட தீவிபத்து கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டது.

களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஏத்தாளைக்குளம் காட்டுப்பகுதியில் இந்த தீ சம்பவம் ஏற்பட்டுள்ளது.

ஏத்தாளைக்குளம் மற்றும் அதனை அண்டிய பகுதியானது சுற்றுச்சூழல் பாதுகாப்பு வலயமாகவும் பறவைகள் சரணாலயமாகவும் இருந்துவருகின்றது.

இதன்போது முன்னெடுக்கப்பட்ட செயற்பாடுகள் காரணமாக தீ பரவுவது கட்டுப்படுத்தப்பட்டதன் காரணமாக பாரிய சேதகங்கள் தவிர்க்கப்பட்டுள்ளது.

இதன்போது குறித்த பகுதிக்கு வருகைதந்த வனஜீவராசிகள் திணைக்கள உத்தியோகத்தர்களும் குறித்த தீவிபத்து சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

குறித்த தீச்சம்பவம் தற்செயலான தீச்சம்பவமாக அல்லது திட்டமிட்ட செயற்பாடுகளா என்பது தொடர்பிலான தகவல்கள் இதுவரையில் வெளியாகாத போதிலும் இது தொடர்பில் களுவாஞ்சிகுடி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

முதல் இணைப்பு

மட்டக்களப்பு குருக்கள் மடம் பறவைகள் சரணாலயத்தின் துறையடி வீதியில் இன்று (26) காலை 7:45 மணியளவில் தீப்பரவல் சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

தீயினை கட்டுப்படுத்துவதற்கு, கிராம பொதுமக்கள் மத்திய சுற்றாடல் அதிகார சபையின் அதிகாரிகள் உதவியுடன் தென் எருவில் பற்று பிரதேச சபையினுடைய நீர்தாங்கிபௌசர் மூலம் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன எனினும் நிலைமையை கட்டுபாட்டுக்குள் கொண்டு வர முடியவில்லை.

பின்னர் சம்பவ இடத்துக்கு குருக்கள்மடம் இராணுவத்தினர் மற்றும் மட்டக்களப்பு மாநகர சபையின் தீயணைப்பு படையினர் வருகை தந்து நிலைமையை கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்தனர்.

சுமார் 4 மணித்தியாலங்கள் போராட்டத்தின் பின்னர் 12.45 மணியளவில் இந்த தீச்சம்பவம் முற்றாக தடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

மட்டக்களப்பு குருக்கள்மடம் பறவைகள் சரணாலயம் கடந்த ஏப்ரல் மாதம் பறவைகள் சரணாலயமாக பிரகடனப்படுத்தப்பட்டதுடன், கிழக்கு மாகாணத்தில் முதல் சுற்றுச்சூழல் பாதுகாப்பு வலயமாக இது காணப்படுகிறது.மத்திய சுற்றுச்சூழல் அதிகார சபையின் கண்காணிப்பின் கீழ் கண்காணிக்கப்பட்டு வருகின்றது .

இப்பறவைகள் சரணாலயத்திற்கு இலட்ச கணக்கிலான உள்நாட்டு,வெளிநாட்டு பறவைகள் வருகை தருகின்றமை குறிப்பிடத்தக்கது. இதனால் இப் பறவைகளின் நிலைத்திருப்புக்கு இச் சம்பவம் சிக்கலானதாக அமைந்ததாக சூழலியலாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இச்சந்தர்ப்பத்தில் பறவைகள் எதற்கும் எந்த பாதிப்பும் ஏற்படாத வகையில் பாதுகாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை சுற்று சூழல் அதிகார சபை மற்றும் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலகம் என்பன மேற்கொண்டு வருகின்றனர்

Tags: Battinaathamnews

தொடர்புடையசெய்திகள்

மட்டுநகரில் பெண்ணின் தங்க சங்கிலியை பறிக்க முயற்சி; சிக்கிய சிசிடிவி காட்சி
செய்திகள்

மட்டுநகரில் பெண்ணின் தங்க சங்கிலியை பறிக்க முயற்சி; சிக்கிய சிசிடிவி காட்சி

September 6, 2026
தலைமன்னார் கடற்பரப்பிலிருந்து கைவிடப்பட்டிருந்த நிலையில் சிறுவர்கள் உள்ளிட்ட11 பேர் மீட்பு
செய்திகள்

தலைமன்னார் கடற்பரப்பிலிருந்து கைவிடப்பட்டிருந்த நிலையில் சிறுவர்கள் உள்ளிட்ட11 பேர் மீட்பு

September 6, 2026
அரசியல்வாதிகளை காரணமின்றி கைதுசெய்கிறது இந்த அரசு; ரணில்
செய்திகள்

அரசியல்வாதிகளை காரணமின்றி கைதுசெய்கிறது இந்த அரசு; ரணில்

September 6, 2026
உள்ளூராட்சி சட்டத் திருத்தப் பணிகள் மேற்கொள்ள அமைச்சரவை அங்கீகாரம்
அரசியல்

உள்ளூராட்சி சட்டத் திருத்தப் பணிகள் மேற்கொள்ள அமைச்சரவை அங்கீகாரம்

September 6, 2026
உயர்தரப் பரீட்சை விடைத்தாள் மதிப்பீடு ஆரம்பம்
செய்திகள்

உயர்தரப் பரீட்சை விடைத்தாள் மதிப்பீடு ஆரம்பம்

September 6, 2026
தற்போதைய உலக வரைபடத்தை மாற்ற ஐ.நா. தீர்மானம்
செய்திகள்

தற்போதைய உலக வரைபடத்தை மாற்ற ஐ.நா. தீர்மானம்

September 6, 2026
Next Post
நாட்டில் மார்பக புற்றுநோயாளர்கள் அதிகரிப்பு; அறிகுறிகள் தென்பட்டால் வைத்தியசாலைக்கு செல்லுமாறு அறிவுறுத்தல்!

நாட்டில் மார்பக புற்றுநோயாளர்கள் அதிகரிப்பு; அறிகுறிகள் தென்பட்டால் வைத்தியசாலைக்கு செல்லுமாறு அறிவுறுத்தல்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.