Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
கோட்டாபயவை போல் செயற்படும் அநுர!

கோட்டாபயவை போல் செயற்படும் அநுர!

2 years ago
in அரசியல், செய்திகள், முக்கிய செய்திகள்

ஜனாதிபதித் தேர்தலுக்குப் பின்னர் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் அண்மைக்கால தீர்மானங்கள், முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தனது தேர்தலுக்குப் பின்னர் எடுத்த தீர்மானங்களுக்கு நிகரானவை என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

“கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டவுடன், அவரும் ஜனாதிபதி அலுவலகத்திற்கு சொந்தமான 993 வாகனங்களை ஏனைய திணைக்களங்களுக்கு பகிர்ந்தளித்தார்.

மதிய உணவு இடைவேளைக்கு ஒதுக்கப்பட்ட நேரத்தையும் குறைத்து, பால் தேநீருக்கு பதிலாக சாதாரண தேநீர் வழங்கி, ஜனாதிபதி மாளிகைக்கு பதிலாக சிறிய வீடொன்றில் தங்கியிருந்தார்.

மக்களின் அதிக எதிர்பார்ப்புகளின் அடிப்படையில் அரசாங்கம் உருவாக்கப்பட்டாலும், அவ்வாறான அரசாங்கத்தை முன்னெடுத்துச் செல்வது கடினம் எனத் தெரிவித்த மஹிந்தானந்த அளுத்கமகே, கோட்டாபய ராஜபக்ஷவுக்கும் இதுவே நேர்ந்தது.

ஜனாதிபதித் தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவளிப்பதாக உறுதியளித்த சகலருடனும் இணைந்து பரந்த எதிர்க்கட்சியொன்றை உருவாக்குவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.

எதிர்வரும் பொதுத் தேர்தலை எதிர்கொள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் புதிய கூட்டணி அமைக்கப்படும்.

ரணில் விக்கிரமசிங்க கூட்டணிக்கு தலைமை தாங்கினாலும், பொதுத் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்றும், தேசியப்பட்டியல் மூலம் நாடாளுமன்றத்துக்கு வரமாட்டார் என்றும் அவர் ஏற்கனவே அறிவித்துள்ளார் என மஹிந்தானந்த அளுத்கமகே மேலும் தெரிவித்தார்.

Tags: BattinaathamnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

விபத்தால் கொந்தளித்த மக்கள் – கண்டெய்னர் லொறி தீக்கிரை; சாரதி கைது!
செய்திகள்

விபத்தால் கொந்தளித்த மக்கள் – கண்டெய்னர் லொறி தீக்கிரை; சாரதி கைது!

July 30, 2026
மட்டு பாலமீன்மடுவில் குடிநீர், மலசல கூடம் மற்றும் மின்சாரம் இன்றி வாழ்ந்து வரும் 30 குடும்பங்கள்
காணொளிகள்

மட்டு பாலமீன்மடுவில் குடிநீர், மலசல கூடம் மற்றும் மின்சாரம் இன்றி வாழ்ந்து வரும் 30 குடும்பங்கள்

July 30, 2026
காட்டன் – தலவாக்கலை வீதியில் இரு அரச பேருந்துகள் மோதி விபத்து!
செய்திகள்

காட்டன் – தலவாக்கலை வீதியில் இரு அரச பேருந்துகள் மோதி விபத்து!

July 30, 2026
மாமாங்கேஸ்வரர் ஆலய மஹோற்சவத்தை முன்னிட்டு மட்டக்களப்பு மாநகர சபையினால்  சிரமதானம்!
காணொளிகள்

மாமாங்கேஸ்வரர் ஆலய மஹோற்சவத்தை முன்னிட்டு மட்டக்களப்பு மாநகர சபையினால் சிரமதானம்!

July 30, 2026
பக்தி வெள்ளத்தில் நிறைவுற்ற தாந்தாமலை ஸ்ரீ முருகன் ஆலய தீர்த்தோற்சவம்
காணொளிகள்

பக்தி வெள்ளத்தில் நிறைவுற்ற தாந்தாமலை ஸ்ரீ முருகன் ஆலய தீர்த்தோற்சவம்

July 30, 2026
கோரகல்லிமடு கணேசா விளையாட்டுக் கழகத்திற்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு
காணொளிகள்

கோரகல்லிமடு கணேசா விளையாட்டுக் கழகத்திற்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு

July 30, 2026
Next Post
இலங்கையில் பிடிபட்ட அரியவகை இளஞ்சிவப்பு நிற நாகபாம்பு!

இலங்கையில் பிடிபட்ட அரியவகை இளஞ்சிவப்பு நிற நாகபாம்பு!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு