Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
குளத்தில் நீராட சென்ற மாணவன் நீரில் மூழ்கி பலி!

குளத்தில் நீராட சென்ற மாணவன் நீரில் மூழ்கி பலி!

2 years ago
in செய்திகள்

கற்பிட்டி – நுரைச்சோலை, ஹாஜராவத்தை பகுதியில் உள்ள குளம் ஒன்றில் குளிக்கச் சென்று நீரில் மூழ்கி காணாமல் போன மாணவர் ஒருவர் நேற்று (29) மாலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

நுரைச்சோலை – ஹாஜராவத்தை பகுதியில் வசித்து வந்த அப்துல் ரஹீம் முஹம்மத் எனும் 16 வயதுடைய மாணவனே இவ்வாறு நீரில் மூழ்கி உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த மாணவன் நுரைச்சோலை – பூலாச்சேனை முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் சாதாரண தரத்தில் கல்வி கற்றுவந்துள்ளார் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

சம்பவம் இடம்பெற்ற போது உயிரிழந்த மாணவனும், அவரது சகோதரனும் லுஹர் தொழுகைக்காக மஸ்ஜிதுக்கு சென்றுவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த போது குளம் ஒன்றில் குளிப்பதற்காக குறித்த மாணவன் சென்றுள்ளார் எனக் கூறப்படுகிறது.

எனினும் உயிரிழந்த மாணவனோடு சென்ற சகோதரன் விளையாடுவதற்காக மைதானத்திற்கு சென்றுவிட்டு தனது மூத்த சகோதரனை அழைத்துச் செல்ல மீண்டும் அந்த குளத்திற்கு வந்த போது அவர் அங்கு இருக்கவில்லை என சொல்லப்படுகிறது.

பின்னர் வீட்டுக்கு சென்ற சகோதரர் நடந்த சம்பவம் பற்றி வீட்டாருக்கு தெரியப்படுத்தியதுடன் அங்கிருந்தவர்களின் உதவியோடு குளத்தில் குளிப்பதற்காக சென்று காணாமல் போன மாணவனை தேடியுள்ளனர்.

இதன்போது சுமார் ஒரு மணி நேரத்திற்கு பின் குளத்தில் இருந்து காணாமல் போன மாணவன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார் என பொலிஸார் குறிப்பிட்டனர்.

உயிரிழந்த குறித்த மாணவனை அங்கிருந்தவர்கள் புத்தளம் தள வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற போதிலும் அவர் அங்கு உயிரிழந்துவிட்டார் என வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர். சம்பவம் தொடர்பில் புத்தளம் பகுதிக்குப் பொறுப்பான திடீர் மரண விசாரணை அதிகாரி தேசமான்ய பதுர்தீன் முஹம்மது ஹிஸாம் மரண விசாரணையை நடத்தினார்.

மேலும் பிரேத பரிசோதனையின் பின்னர் நீரில் மூழ்கியதால் இந்த மரணம் நிகழ்ந்துள்ளது எனத் தீர்ப்பு வழங்கி சடலத்தை பெற்றோர்களிடம் ஒப்படைத்தார். இந்த சம்பவம் தொடர்பில் நுரைச்சோலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags: BattinaathamnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

மட்டக்களப்பில் ஆலய உற்சவ வெடி விபத்தில் சிறுவன் உயிரிழப்பு!
செய்திகள்

மட்டக்களப்பில் ஆலய உற்சவ வெடி விபத்தில் சிறுவன் உயிரிழப்பு!

September 12, 2026
சுகாதார சேவை வெற்றிடங்கள் தொடர்பில் GMOA கோரிக்கை
செய்திகள்

சுகாதார சேவை வெற்றிடங்கள் தொடர்பில் GMOA கோரிக்கை

September 11, 2026
மூதூர் தள வைத்தியசாலை சிற்றுண்டிச்சாலையை மூட நீதிமன்றம் உத்தரவு!
செய்திகள்

மூதூர் தள வைத்தியசாலை சிற்றுண்டிச்சாலையை மூட நீதிமன்றம் உத்தரவு!

September 11, 2026
வாகரையில் கரைவலை படகு விபத்து
செய்திகள்

வாகரையில் கரைவலை படகு விபத்து

September 11, 2026
செஸ் வரியை நீக்கி புதிய சுங்க வரியை அறிமுகப்படுத்த திட்டம்!
செய்திகள்

செஸ் வரியை நீக்கி புதிய சுங்க வரியை அறிமுகப்படுத்த திட்டம்!

September 11, 2026
அரசாங்கத்துக்கு எதிராக அனைத்து இன மக்களும் ஒன்றிணைய வேண்டும்; விமல் வீரவன்ச!
செய்திகள்

அரசாங்கத்துக்கு எதிராக அனைத்து இன மக்களும் ஒன்றிணைய வேண்டும்; விமல் வீரவன்ச!

September 11, 2026
Next Post
தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பில் பரீட்சைகள் ஆணையாளர் நாயகத்தின் இறுதி முடிவு!

தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பில் பரீட்சைகள் ஆணையாளர் நாயகத்தின் இறுதி முடிவு!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.