Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
இஸ்ரேல் பதிலடி கொடுத்தால் மற்றொரு தாக்குதல் நடைபெறும்; ஈரான் தெரிவிப்பு!

இஸ்ரேல் பதிலடி கொடுத்தால் மற்றொரு தாக்குதல் நடைபெறும்; ஈரான் தெரிவிப்பு!

2 years ago
in உலக செய்திகள், செய்திகள்

இஸ்ரேல் மீது நேற்றிரவு சுமார் 400 ஏவுகணைகளை வீசி ஈரான் அதிரடியான பதிலடித் தாக்குதலில் இஸ்ரேலின் பல முக்கிய பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இஸ்ரேல் முழுவதும் எச்சரிக்கை சைரன்கள் ஒலித்துள்ளதாகவும் சுமார் 180 ஏவுகணைகள் ஈரானில் இருந்து இஸ்ரேலை நோக்கி ஏவப்பட்டதாகவும் இஸ்ரேல் இராணுவம் தெரிவித்துள்ளது.

இந்த தாக்குதலுக்கு பின் விளைவுகள் இருக்கும் என இஸ்ரேல் இராணுவ செய்தி தொடர்பாளர் டேனியல் ஹகாரி கூறியுள்ளார்.

எனினும் தம்மால் ஏவப்பட்ட 90% ஏவுகணைகள் இலக்குகளை சரியாக தாக்கியிருப்பதாக ஈரான் அறிவித்துள்ளது. இதற்கு இஸ்ரேல் பதிலடி கொடுத்தால் மற்றொரு தாக்குதல் நடைபெறும் எனவும் ஈரான் எச்சரித்துள்ளது.

லெபனான் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்திய இஸ்ரேலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஈரான் இந்த தாக்குதலை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

ஜூலை மாதம் ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனிய மற்றும் கடந்த வெள்ளிக்கிழமை ஹெஸ்பொலா தலைவர் ஹசன் நஸ்ரல்லா ஆகியோர் படுகொலை செய்யப்பட்டதற்கும், பாலத்தீன, லெபனான் மக்கள் கொல்லப்பட்டதற்கும் பதிலடியாக இந்த ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டதாக புரட்சிகர காவல்படை தெரிவித்துள்ளது.

இதேவேளை, இஸ்ரேலில் உள்ள இலங்கை பிரஜைகள் அனைவரும் மறு அறிவிப்பு வரும் வரை பாதுகாப்பான இடங்களில் இருக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

இஸ்ரேலுக்கான இலங்கைத் தூதுவர் நிமால் பண்டார விசேட அறிவிப்பு ஒன்றை மேற்கொண்டு இதனை தெரிவித்துள்ளார்.

தேவையற்ற பயணங்களிலிருந்து தம்மை பாதுகாத்துக் கொள்ளுங்களுமாறும், பாதுகாப்பு அமைச்சகம் மற்றும் PIBA வழங்கும் வழிமுறைகளை பின்பற்றுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதேபோல், அத்தியாவசிய உணவு, மருந்து, தண்ணீர் ஆகியவற்றை அருகில் வைத்துக் கொள்ளுமாறும் இஸ்ரேலுக்கான இலங்கைத் தூதுவர் தெரிவித்துள்ளார்.

Tags: Battinaathamnewsinternationalnews

தொடர்புடையசெய்திகள்

கோட்டாபய ராஜபக்ஷ கைது செய்யப்பட்டால் தீக்குளிப்பேன்; உதய கம்மன்பில தெரிவிப்பு!
செய்திகள்

கோட்டாபய ராஜபக்ஷ கைது செய்யப்பட்டால் தீக்குளிப்பேன்; உதய கம்மன்பில தெரிவிப்பு!

June 9, 2026
பயங்கரவாதத் தடைச் சட்டம் விரைவில் முழுமையாக நீக்கம்?; அமைச்சர் ஆனந்த விஜேபால அறிவிப்பு!
செய்திகள்

பயங்கரவாதத் தடைச் சட்டம் விரைவில் முழுமையாக நீக்கம்?; அமைச்சர் ஆனந்த விஜேபால அறிவிப்பு!

June 9, 2026
ஏற்றுமதி வருமானம் தொடர்பில் மத்திய வங்கியின் புதிய உத்தரவு!
செய்திகள்

ஏற்றுமதி வருமானம் தொடர்பில் மத்திய வங்கியின் புதிய உத்தரவு!

June 9, 2026
லங்கா சதொசவில் 18 அத்தியாவசியப் பொருட்களின் விலை குறைப்பு!
செய்திகள்

லங்கா சதொசவில் 18 அத்தியாவசியப் பொருட்களின் விலை குறைப்பு!

June 9, 2026
தனியார் தொழிலகத்தில் மின்சாரம் தாக்கி இளைஞன் உயிரிழப்பு!
செய்திகள்

தனியார் தொழிலகத்தில் மின்சாரம் தாக்கி இளைஞன் உயிரிழப்பு!

June 9, 2026
ஈரானுக்கு ஆதரவாக பதிவிட்ட செய்தி வாசிப்பாளருக்கு 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை!
செய்திகள்

ஈரானுக்கு ஆதரவாக பதிவிட்ட செய்தி வாசிப்பாளருக்கு 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை!

June 9, 2026
Next Post
மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சாத்தியம்!

மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சாத்தியம்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு