Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
உர மானியத்தை திரும்ப வழங்குமாறு தேர்தல் ஆணைக்குழுவிற்கு மட்டக்களப்பிலிருந்து சென்ற கோரிக்கை!

உர மானியத்தை திரும்ப வழங்குமாறு தேர்தல் ஆணைக்குழுவிற்கு மட்டக்களப்பிலிருந்து சென்ற கோரிக்கை!

2 years ago
in செய்திகள், மட்டு செய்திகள்

புதிய ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க கடந்த காலங்களில் ஹெக்டயருக்கு 15,000 ரூபாயாக இருந்த எங்களுடைய உர மானிய கொடுப்பனவை 25000 ரூபாவாக உடனடியாக வழங்குமாறு பணித்ததையடுத்து விவசாயிகள் அனைவரும் மிகுந்த சந்தோஷத்திலேயே இருந்தனர். ஆனால் இதனை உடனடியாக நிறுத்துமாறு தேர்தல் ஆணையம் அறிவித்திருக்கின்றது. எனவே இதனை அரசியலாகப் பார்க்காது விவசாய மக்களினுடைய நலனை கருத்தில் கொண்டு தேர்தல் ஆணையம் இதனை திரும்ப வழங்குவதற்கு ஆவணம் செய்ய வேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட விவசாய அதிகாரசபையின் மாவட்ட அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.

மட்டக்களப்பு வெயூஸ் ஒப் மீடியா கற்கை நிலையத்தில் நேற்று புதன்கிழமை (02) இடம்பெற்ற ஊடக மாநாட்டில் மாவட்ட விவசாய அதிகாரசபையின் மாவட்ட அமைப்பின் தலைவர் மற்றும் செயலாளர் இவ்வாறு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

ஜனாதிபதி அனுர குமாரதிசாநாயக்கவுக்கு மாவட்ட அதிகார சபையின் சார்பில் முதலில் எமது நன்றிகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கின்றோம். ஜனாதிபதி கடந்த சில நாட்கள் சிறந்த சில நடவடிக்கைகளை எமது நாட்டிலும், அரசியலிலும் மேற்கொண்டு வருவது எமது விவசாயிகளுக்கும், நாட்டு மக்களுக்கும் சந்தோஷத்தினை அளிக்கின்றது.

அதேபோன்று அவர் விவசாயிகளுக்கான உர மானியத்துக்கான ஹெக்டருக்கு 25000 ரூபாவிற்கு மாற்றுவதாக அறிவித்தார். இந்த செய்தியை கேட்டு எமது விவசாயிகள் கிழக்கு மாவட்டத்தில் மிகவும் சந்தோஷமடைந்ததுடன் கடந்த காலங்களிலே எமது விவசாயிகள் பசளைப் பிரச்சனை காரணமாகவும், பொருளாதார பிரச்சனை காரணமாகவும் கைவிடப்பட்டிருந்த காணிகளை நெற்செய்கை செய்வதற்கு என்று சொல்லி திட்டமிட்டு இருந்தார்கள்.

எனினும் ஒரு சில தினங்களில் பாராளுமன்ற தேர்தலுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டதால் தேர்தல் ஆணையாளர் இவ்வாறான சில கொடுப்பனவுகளை தற்போது மேற்கொள்ள முடியாது எனக்கூறி ஒரு உத்தரவிட்டிருந்தார்.

மிகுந்த சந்தோஷத்திலேயே விவசாயிகள் அனைவரும் இருந்த போதும் தற்போது பாரிய ஏமாற்றத்தோடும் பாரிய வீழ்ச்சியாகவும் நாங்கள் இதனை எதிர்பார்க்கின்றோம். இதனை அரசியலாகப் பார்க்காது விவசாய மக்களினுடைய நலனை கருத்தில் கொண்டு தேர்தல் ஆணையம் இதனை திரும்ப வழங்குவதற்கு ஆவணம் செய்ய வேண்டும்.

இந்த உத்தரவின் காரணமாக விவசாயிகள் மிகவும் மனவேதனை அடைந்துள்ளனர் எனவே இவ்வாறான ஒரு செயற்பாடானது எமது மாவட்டத்திற்கும் நாட்டுக்கும் எதிர்காலத்திலே உணவு உற்பத்தியிலும் ஏனைய பொருளாதார ரீதியாகவும் பாரிய ஒரு தாக்கத்தினை ஏற்படுத்தும்.

தற்போது விவசாயிகள் உழவு வேலைகளை ஆரம்பித்து விவசாய செயற்பாடுகளில் ஈடுபட்டு இருக்கின்றார்கள். எனவே எமது உர மானியத்துக்கான அதிகரிக்கப்பட்ட கொடுப்பனவை உடனடியாக வழங்குவதன் மூலம் விவசாயிகளுக்கு பெரிய உதவியாக இருக்கும் என தேர்தல் ஆணையத்திடம் பணிவாக கேட்டுக் கொள்கின்றோம்.

தற்பொழுது டீசல், பெற்றோல், மண்ணெண்ணை விலைகள் முதலாம் திகதியில் இருந்து ஜனாதிபதி குறைத்தது விவசாயிகளுக்கு பாரிய நிவாரணமாக அமைகின்றது. எனவே ஜனாதிபதி எதிர்காலத்தில் எங்களுக்கான பசளை, களைநாசிகளுக்கான விலைகளை குறைத்து நாட்டின் பொருளாதாரத்தை கட்டி எழுப்ப விவசாயிகளுக்கு பூரண ஒத்துழைப்புக்களை வழங்க வேண்டும்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewsmattakkalappuseythikalSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

இலங்கையில் முதலீடு செய்ய வலுவான நம்பிக்கை ஏற்பட்டுள்ளது; ஜனாதிபதியை சந்தித்த சைனா ஹார்பர் தலைவர்
செய்திகள்

இலங்கையில் முதலீடு செய்ய வலுவான நம்பிக்கை ஏற்பட்டுள்ளது; ஜனாதிபதியை சந்தித்த சைனா ஹார்பர் தலைவர்

June 13, 2026
சுரேஷ் சலேவுக்கு சட்டத்தின் முன் சமத்துவம் வழங்கப்பட வேண்டும்; ஜனாதிபதிக்கு முன்னாள் எம்.பிக்கள் கடிதம்!
செய்திகள்

சுரேஷ் சலேவுக்கு சட்டத்தின் முன் சமத்துவம் வழங்கப்பட வேண்டும்; ஜனாதிபதிக்கு முன்னாள் எம்.பிக்கள் கடிதம்!

June 13, 2026
எரிபொருளுக்கான அரச மானியம் ஜூன் மாதத்துடன் நிறைவு!
செய்திகள்

எரிபொருளுக்கான அரச மானியம் ஜூன் மாதத்துடன் நிறைவு!

June 13, 2026
பண்டாரநாயக்க விமான நிலைய இரண்டாம் முனைய கட்டுமானம் நவம்பரில் மீண்டும் ஆரம்பிக்கத் திட்டம்
செய்திகள்

பண்டாரநாயக்க விமான நிலைய இரண்டாம் முனைய கட்டுமானம் நவம்பரில் மீண்டும் ஆரம்பிக்கத் திட்டம்

June 13, 2026
மாதம்பேவில் 5 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை; 65 வயது வர்த்தகர் கைது
செய்திகள்

மாதம்பேவில் 5 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை; 65 வயது வர்த்தகர் கைது

June 13, 2026
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் சுரேஷ் சலே குறித்து சரத் ​​பொன்சேகா கடும் குற்றச்சாட்டு!
செய்திகள்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் சுரேஷ் சலே குறித்து சரத் ​​பொன்சேகா கடும் குற்றச்சாட்டு!

June 13, 2026
Next Post
மத்திய வங்கி ஆளுநர்களின் ஓய்வூதியம் இடைநிறுத்தம்!

மத்திய வங்கி ஆளுநர்களின் ஓய்வூதியம் இடைநிறுத்தம்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.