யாழ்ப்பாணம், வன்னி, மற்றும் மட்டக்களப்பு ஆகிய இடங்களுக்கு எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்த உள்ளதாக ஒருங்கிணைந்த தமிழர் கட்டமைப்பு அறிவித்துள்ளது.
குறித்த தகவலை ஒருங்கிணைந்த தமிழர் கட்டமைப்பு பொதுச்செயலாளர் வெளியிட்டுள்ள அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளார்.
அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
கடந்த முன்று ஆண்டுகளுக்கு முன் தமிழ் மக்கள் பேரவையின் வீழ்ச்சியின் பின் வட கிழக்கு சார்ந்த தமிழ் தேசிய செயற்பாட்டாளர்கள் ஒன்றுகூடி உருவாக்கப்பட்ட தமிழ் மக்களை ஒன்றிணைத்து வட கிழக்கு வாழ் தமிழ் மக்களின் சமூக அரசியல் தளங்களில் செயற்படும் வண்ணம் மக்களை அணி திரட்டும் வண்ணம் உருவாக்கப்பட்டிருக்கும் தமிழர்கள் அனைவருக்கும் பொதுவான கட்டமைப்பு இது ஆகும்.
தமிழ் மக்கள் பேரவையினால் வரையப்பட்ட தமிழ் தேசிய பிரச்சனைக்கான தீர்விற்கான மக்கள் கருத்தாணையை கொள்கை சித்தாந்தமாக கொண்டிருக்கின்றது.
ஜனாதிபதி தேர்தலில் தமிழ் பொது வேட்பாளர் அரியநேந்திரன் அவர்களை ஆதரித்து வடகிழக்கில் தனது தீவிர பிரச்சாரங்களை மெற்கொண்டிருந்தது.
அதன் நீட்சியாக இப்போது வந்திருக்கின்ற நாடாளுமன்றத் தேர்தல் கட்சிகளை கடந்த ரீதியில் வடகிழக்கு தழுவிய போது வேட்பாளர்களுடன் தமிழர் சம உரிமை இயக்கம் எனும் மக்கள் இயக்க சக்தியாக எதிர்கொள்கின்றது.
யாழிலும் வன்னியிலும் மட்டக்களப்பிலும் பொது வேட்பாளர்களை நிறுத்த உள்ளது. தமிழர் பிரதிநிதித்துவத்தை கருத்தினை கொண்டு திருமலையில் அம்பாறையில் இம்முறை போட்டியிட இல்லை.
தமிழரின் சமூக அரசியல் செயற்பாட்டு தளம் சரியான சொல் நெறியில் செல்வதை விரும்புவோர், அதில் பங்களிக்க ஆர்வமானோர், சிவில் சமூக செயற்பாட்டாளாராக ஒருங்கிணைந்த தமிழர் கட்டமைப்பிலே அரசியல் செயற்பாட்டாளராக தமிழர் சம உரிமை இயக்கத்தில் இணைந்து கொள்ள முடியும் என குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.