Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
களுதாவளை கொலை சம்பவத்துடன் தேடப்பட்டு வந்த நபர் திருகோணமலையில் சடலமாக மீட்பு!

களுதாவளை கொலை சம்பவத்துடன் தேடப்பட்டு வந்த நபர் திருகோணமலையில் சடலமாக மீட்பு!

2 years ago
in செய்திகள், மட்டு செய்திகள்

கொலைச் சம்பவத்துடன் தேடப்பட்டு வந்த சந்தேக நபரொருவர் திருகோணமலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இந்த சடலம் மூதூர் காவல்துறை பிரிவிட்குட்பட்ட இருதயபுரம் பகுதியில் உள்ள தென்னைமரத் தோட்டமொன்றிலிருந்து நேற்று (03) காலை மீட்கப்பட்டுள்ளது.

இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் பட்டித்திடல் – தோப்பூர் பகுதியைச் சேர்ந்த 48 வயதுடைய கந்தவனம் சசிகுமார் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

மட்டக்களப்பு – களுவாஞ்சிக்குடி காவல்துறை பிரிவிட்குட்பட்ட களுதாவளை பகுதியில் 43 வயதுடைய மனைவியை கொலை செய்த சந்தேகத்தின் பெயரில் தேடப்பட்டு வந்த சந்தேக நபர் உயிரிழந்த நபர் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

குறித்த பெண், கடந்த 24 ஆம் திகதி களுதாவளையிலுள்ள தனது வீட்டில் கொலை செய்யப்பட்டு இரத்த காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இதேவேளை, உயிரிழந்த நபர் மனைவியின் கொலை குற்றச்சாட்டில் பொலிஸாரால் தேடப்பட்டு வந்த நிலையில் களுதாவளையிலிருந்து தப்பித்து மூதூருக்கு சென்று தலைமறைவாக இருந்த நிலையில் நேற்று(03) சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில், சந்தேக நபரின் உயிரிழப்பு சம்பவத்திற்கான காரணம் இதுவரையில் கண்டறியப்படாத அடிப்படையில் சடலம் உள்ள பகுதிக்கு திருகோணமலை தடயியல் பிரிவு காவல்துறையினர் சென்று பரிசோதனைகளை மேற்கொண்டுள்ளனர்.

அத்துடன், மூதூர் நீதவான் நீதிமன்ற நீதிபதி தஸ்னீம் பௌசான் வருகைதந்து சடலத்தை பார்வையிட்டதுடன் பிரேத பரிசோதனைகளுக்காக சடலத்தை திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்குமாறு மூதூர் காவல்துறையினருக்கு உத்தரவிட்டுள்ளார்.

மேலும், சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை மூதூர் காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.

Tags: BatticaloaNewsBattinaathamnewsmattakkalappuseythikalsrilankanews

தொடர்புடையசெய்திகள்

இலங்கையுடன் மூன்று பாதுகாப்பு ஒப்பந்தங்கள்; ராஜ்நாத் சிங் முன்னிலையில் கைச்சாத்து!
செய்திகள்

இலங்கையுடன் மூன்று பாதுகாப்பு ஒப்பந்தங்கள்; ராஜ்நாத் சிங் முன்னிலையில் கைச்சாத்து!

September 9, 2026
தலைக்கவசமின்றி அதிவேகமாக பயணித்த மோட்டார் சைக்கிள் விபத்து; ஒருவர் பலி!
செய்திகள்

தலைக்கவசமின்றி அதிவேகமாக பயணித்த மோட்டார் சைக்கிள் விபத்து; ஒருவர் பலி!

September 9, 2026
பொது சுகாதாரத்தில் இலங்கையின் வரலாற்றுச் சாதனைகளுக்கு WHO அங்கீகாரம்
செய்திகள்

பொது சுகாதாரத்தில் இலங்கையின் வரலாற்றுச் சாதனைகளுக்கு WHO அங்கீகாரம்

September 9, 2026
AI மூலம் உருவாக்கப்படும் போலி பொலிஸ் விளம்பரங்கள் குறித்து எச்சரிக்கை!
செய்திகள்

AI மூலம் உருவாக்கப்படும் போலி பொலிஸ் விளம்பரங்கள் குறித்து எச்சரிக்கை!

September 9, 2026
சந்திவெளி விபத்தில் கிரான்குளத்தைச் சேர்ந்த 22 வயது இளைஞன் பலி
செய்திகள்

சந்திவெளி விபத்தில் கிரான்குளத்தைச் சேர்ந்த 22 வயது இளைஞன் பலி

September 9, 2026
இலங்கையில் டிக்டொக் முற்றாக தடைசெய்யப்படவேண்டுமென அர்ச்சுனா வலியுறுத்து
காணொளிகள்

இலங்கையில் டிக்டொக் முற்றாக தடைசெய்யப்படவேண்டுமென அர்ச்சுனா வலியுறுத்து

September 9, 2026
Next Post
லாஃப்ஸ் எரிவாயு விலையில் மாற்றம் ஏற்படாது!

லாஃப்ஸ் எரிவாயு விலையில் மாற்றம் ஏற்படாது!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு