ராஜபக்சக்கள் கொள்ளையடித்த சொத்துக்களை நாட்டு மக்களிடம் வெளிப்படுத்தி திருடர்களுக்கு கைவிலங்கிடும் நாள் மிக விரைவில் என தேசிய மக்கள் சக்தி தெரிவிப்பு!
திருடர்களை பிடித்து விட்டீர்களா என வாய்ச் சவடால் விடுபவர்களுக்கு கூறுகிறேன் நாங்கள் கடந்து கொண்டிருப்பது திருடர்களுக்கு கைவிலங்கு போடும் இறுதி மணித்தியாலங்கள் என்பதை கூறிக் கொள்ள விரும்புகிறோம் என தேசிய மக்கள் சக்தியின் நிறைவேற்று குழு உறுப்பினர் வசந்த சமரசிங்க நேற்றைய தினம்(06) ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளார்.
திருடர்களை பிடித்து விட்டீர்களா என்று சிலர் நையாண்டியாக பேசுகிறார்கள் திருடர்களைப் பிடிக்க எமக்கு வரம் கிடைத்துள்ளதால் மண்சட்டி கடைக்குள் புகுந்த கிடாமாட்டைப் போன்று நடந்து கொள்ள வேண்டிய அவசியம் இல்லை.
ராஜபக்சக்கள் கொள்ளையடித்த சொத்துக்கள் இந்த நாட்டில் இருக்கிறதா, வெளிநாடுகளில் இருக்கிறதா அல்லது பங்குச் சந்தையில் இருக்கிறதா, காணிகளில் இருக்கிறதா என்பது பற்றி நாட்டு மக்களுக்கு மிக விரைவில் வெளிப்படுத்த தயாராக இருக்கிறோம்.
திருடர்களின் திருவிளையாடல்களை முடிவுக்கு கொண்டு வரும் இறுதி மணித்தியாளங்களை நாங்கள் கடந்து சென்று கொண்டு இருக்கிறோம் எனவும் அவர் பதில் அளித்துள்ளார்.