வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான இந்திய டி20 அணி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்வு குழு தலைவராக அஜித் அகார்கர் நியமிக்கப்பட்ட நிலையில் அவர் தன்னுடைய முதல் பணியாக டி20 தொடர்கான இந்திய அணியை அறிவித்துள்ளார்.
அடுத்த ஆண்டு டி20 உலக கோப்பை நடைபெறும் நிலையில் இளம் வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கும் விதமாக அணி தேர்வு செய்யப்பட்டிருக்கிறது. இந்தத் தொடரில் வழக்கம் போல் விராட் கோலி ரோகித் சர்மா போன்ற வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை.
டி20 அணிக்கு ஹர்திக் பாண்டியா கேப்டன் ஆகவும் சூரியகுமாரியாதவ் துணை கேப்டன் ஆகவும் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள். தொடக்க வீரர்களா ஜெய்ஸ்வால் ஆகிய மூன்று வீரர்கள் தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார்கள். நடுவரிசைக்கு திலக் வர்மா, சூரியகுமார் யாதவ், சஞ்சு சாம்சன், ஹர்திக் பாண்டியா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
சுழற் பந்துவீச்சாளர்களாக அக்சர் பட்டேல் என நான்கு சுழற் பந்துவீச்சாளர்கள் இடம்பெற்றுள்ளனர். இதைப் போன்று வேகப்பந்துவீச்சாளராக ஆர்ஸ்தீப் சிங், உம்ரான் மாலிக், ஆவேஷ் கான், முகேஷ் குமார் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். இதேபோன்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ரிங்கு சிங் டி20 அணியில் இடம்பெறவில்லை. ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாடி அனைவரின் கவனத்தையும் ஈர்த்த ரிங்கு சிங், சுரேஷ் ரெய்னா போல் சிறப்பாக விளையாடுகிறார் என அனைவரும் பாராட்டப்பட்ட நிலையில் அஜித் அகார்கர் வாய்ப்பு வழங்கவில்லை.
இதேபோன்று சிஎஸ்கே அணியின் நட்சத்திர வீரர் ருத்ராஜுக்கும், தமிழக வீரர் சாய் சுதர்சனுக்கும் இந்திய டி20 அணியில் வாய்ப்பு கிடைக்கவில்லை. வெஸ்ட் இண்டீஸ் க்கு எதிரான ஐந்து t20 போட்டிகள் கொண்ட தொடரில் நான்கு சுழற் பந்துவீச்சாளர்கள் தேவையா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. இதனால் ரிங்கு சிங்கை இந்திய அணியில் சேர்த்திருக்க வேண்டும் என்றும் முதல் பணியிலேயே அஜித் அகார்கர் தவறு செய்து விட்டதாக பலரும் விமர்சித்து இருக்கிறார்கள்.