Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
இலங்கையர்களை மீட்க மியன்மாரின் உதவி கோரியுள்ள பிரதமர் ஹரிணி அமரசூரிய!

இலங்கையர்களை மீட்க மியன்மாரின் உதவி கோரியுள்ள பிரதமர் ஹரிணி அமரசூரிய!

2 years ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

மியன்மார் அரசாங்கம் மற்றும் புலம்பெயர்வுக்கான சர்வதேச அமைப்பு (IOM) மூலம் மியான்மாரின் மியாவாடி பிராந்தியத்தில் இணைய குற்ற மையங்களில் இன்னும் தடுத்து வைக்கப்பட்டுள்ள மேலதிக இலங்கையர்களை மீட்பதற்கு தாய்லாந்து அரசாங்கத்தின் உதவியை பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய கோரியுள்ளார்.

தாய்லாந்து தூதுவர் பைட்டூன் மஹாபன்னபோர்ன் (Paitoon Mahapannaporn, ) மற்றும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய ஆகியோருக்கு இடையில் நேற்று (10) பிரதமர் அலுவலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே பிரதமர் இந்தக் கோரிக்கையை முன்வைத்தார்.

இணைய குற்ற மையங்களில் இருந்து 28 இலங்கையர்களை மீட்பதற்கு தாய்லாந்து அரசாங்கம் வழங்கிய உதவிகளுக்கு நன்றி தெரிவித்த பிரதமர், இன்னும் மேற்படி மையங்களில் உள்ள 40 இலங்கையர்களை மீட்பதற்கு தொடர்ந்து ஆதரவளிக்குமாறு கேட்டுக் கொண்டார்.

தூதுவர் பைட்டூன் மஹாபன்னபோர்ன் அவர்கள் இலங்கையின் புதிய பிரதமராக நியமிக்கப்பட்டுள்ள கலாநிதி ஹரிணி அமரசூரிய அவர்களுக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்ததுடன், இலங்கைக்கும் தாய்லாந்துக்கும் இடையிலான இருதரப்பு உறவை வலுப்படுத்தவும், சுற்றுலாத்துறையை மேம்படுத்தவும் விருப்பம் தெரிவித்தார். மேலும் நவீன விவசாய தொழில்நுட்பப் பயன்பாடு, ருஹுனு பல்கலைக்கழகம் மற்றும் வயம்ப பல்கலைக்கழகத்தின் விவசாய பீடங்கள் இணைந்து அறுவடைக்குப் பிந்திய தொழில்நுட்பம் மற்றும் உணவு பதப்படுத்துதல் போன்ற ஆராய்ச்சித் துறைகளுக்கான ஒத்துழைப்பை அதிகரிப்பது குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டது.

இந்த கலந்துரையாடலில் பிரதமரின் செயலாளர் பிரதீப் சபுதந்திரி, திருமதி ப்ராங்டிப் கோங்கிரிதிசுக்சகோர்ன் (Prangtip Kongridhisuksakorn) மற்றும் திரு. தோம் பெட்ச்புக்டெபோங் (Thom Petchpugdepong) உள்ளிட்ட தாய்லாந்து தூதரகத்தின் சிரேஷ்ட அதிகாரிகள், பணிப்பாளர் நாயகம் சசிகலா பிரேமவர்தன மற்றும் வெளிவிவகார அமைச்சின் தென்கிழக்கு ஆசிய பிரிவின் பணிப்பாளர் திலினி இகலகே ஆகியோரும் கலந்துகொண்டனர்.

Tags: Battinaathamnewssrilankanews

தொடர்புடையசெய்திகள்

உயர்தரப் பரீட்சைக்கு தோற்றவுள்ளொருக்கான அறிவிப்பு
செய்திகள்

உயர்தரப் பரீட்சைக்கு தோற்றவுள்ளொருக்கான அறிவிப்பு

July 24, 2026
நீதியமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை தோல்வி
செய்திகள்

நீதியமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை தோல்வி

July 24, 2026
கிழக்கு மாகாண வீடமைப்பு அதிகார சபை பணிப்பாளர் சபை உறுப்பினராக வாழைச்சேனையைச் சேர்ந்த சந்திரா டிசோ நியமனம்
செய்திகள்

கிழக்கு மாகாண வீடமைப்பு அதிகார சபை பணிப்பாளர் சபை உறுப்பினராக வாழைச்சேனையைச் சேர்ந்த சந்திரா டிசோ நியமனம்

July 24, 2026
நிதி மோசடி குற்றச்சாட்டு; இலங்கை மத்திய வங்கி மீது குற்றச்சாட்டு
செய்திகள்

நிதி மோசடி குற்றச்சாட்டு; இலங்கை மத்திய வங்கி மீது குற்றச்சாட்டு

July 24, 2026
இரத்தக்கறைகளுடன் வீடொன்றில் முதியவரின் சடலம்; பொலிஸார் விசாரணை!
செய்திகள்

இரத்தக்கறைகளுடன் வீடொன்றில் முதியவரின் சடலம்; பொலிஸார் விசாரணை!

July 24, 2026
செம்மணி என்புக்கூடுகளை பார்க்கும்போது குற்றம் நடந்து அவசரமாக புதைக்கப்பட்டது போல் தெரிகிறது
செய்திகள்

செம்மணி என்புக்கூடுகளை பார்க்கும்போது குற்றம் நடந்து அவசரமாக புதைக்கப்பட்டது போல் தெரிகிறது

July 24, 2026
Next Post
கணவனின் உறவினரால் தாக்கப்பட்ட பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு!

கணவனின் உறவினரால் தாக்கப்பட்ட பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு